ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் ஜப்பானை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கோஸ்டாரிகா வெற்றி பெற்றது.
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் க்ரூப் இ-யில் இடம்பெற்றுள்ள ஜப்பான் மற்றும் கோஸ்டாரிகா அணிகள் மோதின.
இந்த போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. 2ம் பாதியில் இரு அணிகளுமே கோல் அடிக்க கடுமையாக போராடிய நிலையில், ஆட்டத்தின் 80வது நிமிடத்தில் கோஸ்டாரிகா வீரர் கெய்ஷெர் ஒரு கோல் அடித்தார். ஆனால் ஜப்பான் அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகா அணி வெற்றி பெற்றது.
undefined
FIFA World Cup 2022: காயத்தால் க்ரூப் போட்டிகளிலிருந்து விலகிய நெய்மர்.. பிரேசில் அணிக்கு மரண அடி
புள்ளி பட்டியலில் க்ரூப் ஏ-வில் நெதர்லாந்து, ஈகுவடார் அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன. க்ரூப் பி-யில் இங்கிலாந்து, ஈரான் அணிகளும், க்ரூப் சி-யில் போலந்து, அர்ஜெண்டினா அணிகளும், க்ரூப் டி-யில் ஃப்ரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகளும் முதலிரண்டு இடங்களில் உள்ளன.
க்ரூப் இ-யில் ஸ்பெய்ன், ஜப்பான் அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன. க்ரூப் எஃப்-ல் பெல்ஜியம், குரோஷியா அணிகளும், க்ரூப் ஜி-யில் பிரேசில், சுவிட்சர்லாந்து அணிகளும், க்ரூப் எச்-ல் போர்ச்சுகல் மற்றும் தென்கொரியா அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன.