FIFA World Cup 2022: டென்மார்க் - துனிசியா கோல் அடிக்காததால் போட்டி டிரா..! புள்ளி பட்டியல் அப்டேட்

By karthikeyan VFirst Published Nov 22, 2022, 9:02 PM IST
Highlights

ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையில் டென்மார்க் - துனிசியா அணிகள் மோதிய போட்டியில் இரு அணிகளுமே கோல் அடிக்காததால் ஆட்டம் 0-0 என டிரா ஆனது.
 

22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் கடந்த 20ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் கத்தாரை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஈகுவடார் அணி அபார வெற்றி பெற்றது.

2வது நாளான நேற்று நடந்த போட்டிகளில், ஈரானை 6-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் செனகலை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி பெற்றது.

FIFA World Cup 2022: கடும் கட்டுப்பாடுகளால் கடுப்பான ரசிகர்கள்! காசு கொடுத்து போலியாக கூட்டம் சேர்த்த கத்தார்?

3ம் நாளான இன்று 3 போட்டிகள் நடக்கின்றன. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்த அர்ஜெண்டினா மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. அந்த போட்டியில் அர்ஜெண்டினா அணியில் லியோனல் மெஸ்ஸி மட்டுமே ஒரு கோல் அடித்தார். அர்ஜெண்டினா வீரர்கள் வேறு யாருமே கோல் அடிக்கவில்லை. ஆனால் ஆட்டத்தின் 2ம் பாதியில் சவுதி அணி 2 கோல்கள் அடிக்க, சவுதியிடம் 2-0 என அர்ஜெண்டினா அணிஅதிர்ச்சி தோல்வியடைந்தது.

இந்த முறை உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றான அர்ஜெண்டினா, சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் க்ரூப் டி-யில் இடம்பெற்றுள்ள டென்மார்க் - துனிசியா அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளுமே கடுமையாக போராடியும் கடைசிவரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. எனவே போட்டி டிராவில் முடிந்தது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதுவரை க்ரூப் ஏ, பி, சி, டி-யில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கு இடையேதான் போட்டிகள் நடந்திருக்கின்றன. க்ரூப் இ, எஃப், ஜி, எச் அணிகளுக்கு ஒரு போட்டி கூட நடக்கவில்லை.

FIFA World Cup 2022:செமயா ஆடிய சவுதி அரேபியா.. மெஸ்ஸியை தவிர யாருமே கோல் அடிக்கல! அர்ஜெண்டினா அதிர்ச்சி தோல்வி

புள்ளி பட்டியலில் க்ரூப் ஏ-வில் நெதர்லாந்து மற்றும் ஈகுவடார் அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன. க்ரூப் பி-யில் இங்கிலாந்து முதலிடத்திலும் வேல்ஸ் 2ம் இடத்திலும் உள்ளன. க்ரூப் சி-யில் ஒரு போட்டி மட்டுமே நடந்திருப்பதால் அந்த போட்டியில் ஜெயித்த சவுதி அரேபியா முதலிடத்திலும், அர்ஜெண்டினா 4ம் இடத்திலும் உள்ளன. க்ரூப் டி-யில் டென்மார்க் - துனிசியா இடையேயான போட்டி டிராவாகி புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதால் இருஅணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றுள்ளன.
 

click me!