விஜய் டிவி சூப்பர் சிங்கர்... முதல் முறையாக டைட்டில் வென்ற பெண்... பூஜாவா, அருணாவா?

By SG Balan  |  First Published Jun 25, 2023, 8:45 PM IST

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமான ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் 9வது சீசன் சில மாதங்களுக்கு முன் தொடங்கி நடைபெற்று வந்தது. இறுதிப் போட்டியில் யார் டைட்டில் வெல்லப் போகிறார் என்று ரசிகர்கள் மிகுத்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இன்றைய தினம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாலை 3 மணி முதல் சூப்பர் சிங்கர் சீசன் 9 பைனல் சற்று நேரலையாக நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி விஜய் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அபிஜித், அருணா, பூஜா, பிரியா, பிரசன்னா ஆகிய ஐந்து பேர் வெற்றிக்காகப் போட்டியிட்டார்கள்.

Latest Videos

Video: ஹாலிவுட் சாகசக் காட்சிகளை மிஞ்சும் சம்பவம்! வெள்ளத்தில் காரில் சிக்கியவர் பத்திரமாக மீட்பு

இந்த 5 பேரில் ஜெயிக்கப்போவது யார் என்ற கேள்வியுடன் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியைக் கேட்டு ரசித்தனர். முதல் போட்டியாளராக களமிறங்கிய அபிஜித், அர்ஜூனரு வில்லு பாடலைப் பாடினார். அடுத்து வந்த பூஜா தன் இனிமையான குரலால் ரசிகர்களை உருக வைத்தார்.ஒ பின்னர் பாட வந்த பிரசன்னா உலக நாயகன் கமல் பாடிய விக்ரம் பாடலைப் பாடி அரங்கத்தை அதிர வைத்தார்.

இரண்டாவது சுற்றில் போட்டியாளர்கள் மாறுபட்ட பாடல்களைத் தேர்வு செய்து திறமையைக் காட்டினர். அபிஜித், பூஜா, பிரசன்னா, பிரியா, அருணா ஆகிய அனைவருமே தங்கள் குரலால் சிறப்பு விருந்தினர் ஹாரிஸ் ஜெயராஜை அதிசயிக்க வைத்தனர். அனைவரும் பாடி முடித்ததும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் அறிவிக்கப்படும் நேரம் வந்தது.

இது புளிக்குழம்பா எலிக்குழம்பா! உ.பி. மருத்துவக் கல்லூரி உணவில் செத்துக் கிடந்த எலி!

வாழ்த்துகள் 💐👏🎉 pic.twitter.com/PHejVXtVva

— Vijay Television (@vijaytelevision)

முடிவில், அருணா சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் வரலாற்றில் முதல் முறையாக பெண் ஒருவர் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். ஆன்மீகப் பாடல்கள் மூலம் முழு சீசனையும் கலக்கி வந்த அருணா பைனலில் அசத்தலாகப் பாடி வெற்றியாளராக மாறியிருக்கிறார்.

சூப்பர் சிங்கர் சீசன் 9 டைட்டில் வென்றுள்ள அருணாவுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மெண்ட் மற்றும் 10 லட்சம் ரூபாய் பணமும் வழங்கப்படுகிறது. இரண்டாவது இடத்தை தட்டிச்சென்ற பிரியா 10 லட்சம் ரூபாய் பணத்தைப் பரிசாகப் பெறுகிறார். பிரசன்னா மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். இவருக்கு ரூ.5 லட்சம் பரிசாகக் கிடைத்துள்ளது. வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் நடுவர்களும் இணைந்து டிராபியை வழங்கினர்.

டெல்லியில் கொட்டிய மழை... ரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி பெண் பலி

click me!