ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு ரூ.25 லட்சம்... பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அசீம்

By Ganesh A  |  First Published Jan 25, 2023, 2:27 PM IST

பிக்பாஸ் சீசன் 6 டைட்டிலை ஜெயித்த பின்னர் முதன்முறையாக வீடியோ வெளியிட்டுள்ள அசீம், ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக ரூ.25 லட்சம் தருவதாக அறிவித்துள்ளார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த வாரம் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியின் பைனலில் அசீம் அதிகவாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். அவருக்கு ரூ.50 லட்சத்துக்கான காசோலை மற்றும் பிக்பாஸ் டிராபியை வழங்கினார் கமல்ஹாசன். அதன்பின் அவருக்கு கார் ஒன்றும் பரிசாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

பிக்பாஸ் 6 டைட்டில் வின்னராக அசீம் அறிவிக்கப்பட்டதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பெண்களை தரக்குறைவாக பேசி, சண்டை போட்ட ஒருவரும் டைட்டில் கொடுத்தது ஏற்றுக்கொள்ள முடியாது. இது தவறான முன்னுதாரனமாக அமைந்துள்ளதாக கடுமையாக விமர்சித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தனர்.

Latest Videos

undefined

இதையும் படியுங்கள்... யார் இந்த அசீம்?... ரெட் கார்டு வாங்கியவர் பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆனது எப்படி? - அவர் கடந்து வந்த பாதை

பிக்பாஸ் பைனலுக்கு பின் எந்தவித வீடியோவும் பதிவிடாமல் இருந்து வந்த அசீம், இன்று முதன்முறையாக முக்கிய அறிவுப்புடன் கூடிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது தான் டைட்டில் வென்றால் பரித்தொகையில் இருந்து பாதி, அதாவது ரூ.25 லட்சத்தை கொரோனாவால் பெற்றோர்களை இழந்து தவிக்கு ஏழைக் குழந்தைகளின் படிப்புச் செலவுக்காக வழங்குவேன் என அறிவித்திருந்தார்.

சொன்னபடியே தற்போது அதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இதற்காக தனி வங்கிக் கணக்கு ஒன்றை தொடங்கி, அதில் ரூ.25 லட்சத்தை போட்டு, உதவி கேட்டு நாடும் ஏழைக் குழந்தைகளுக்கு அவர்களின் விவரங்கள் சரிபார்த்த பின்னர் அந்த பணத்தை வழங்க இருப்பதாக அசீம் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். அசீமின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by MOHAMED AZEEM (@actor_azeem)

இதையும் படியுங்கள்... இந்த வெற்றி உனக்கு சமர்ப்பணம் செல்லமே.... பிக்பாஸ் வெற்றியை மகனுடன் சேர்ந்து ஜாலியாக கொண்டாடிய அசீம்

click me!