பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் பட்டத்தை அஸிம் தட்டிச்சென்றார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் அதிக வாக்குகளை பெற்று டைட்டில் வின்னர் பட்டத்தை அஸிம் தட்டிச்சென்றார். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 100 நாட்களைக் கடந்து இன்றோடு நிறைவு பெற்றது. கடந்த அக்.9 ஆம் தேதி தொடங்கியது. இதில் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பின்னர் இதில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக மைனா நந்தினி பங்கேற்றார். பின்னர் ஒவ்வொரு வாரமும் மக்களின் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர்கள் வீட்டிலிருந்து வெளியேறினர். போட்டி இறுதி கட்டத்தை எட்டும் சூழலில் போட்டியாளர் கதிரவன் பணமூட்டையை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.
இதையும் படிங்க: பிக்பாஸ் 6 பைனலில் திடீர் டுவிஸ்ட்... யாரும் எதிர்பார்க்காத போட்டியாளர் டைட்டிலை தட்டிச் சென்றார்
அதேபோல் அமுதவாணனும் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார். இறுதியாக அஸிம், விக்ரமன், ஷிவின் மற்றும் மைனா நந்தினி இருந்த நிலையில் இறுதி எவிக்ஷனாக மைனா நந்தினி வீட்டிருந்து வெளியேறினார். இதை அடுத்து இறுதி போட்டியாளராக அஸிம், விக்ரமன், ஷிவின் ஆகிய மூவர் மட்டுமே வீட்டினுள் இருந்தனர். இந்த நிலையில் பிக்பாஸ் தமிழ் 6 வெற்றியாளர் யார் என்பது மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தும் விக்ரமன் பைனலில் தோற்றுப்போனது ஏன்? - வெளியான ஷாக்கிங் பின்னணி
இந்த நிலையில், மூன்றாம் இடத்தை ஷிவின் பெற்ற நிலையில் மேடையில் முதல் இரண்டு இடங்களில் இருந்த விக்ரமன் மற்றும் ஆஸிம் ஆகியோரின் கைகளை பிடித்திருந்த கமல்ஹாசன், அஸிம் கையை உயர்த்தி வெற்றியாளராக அறிவித்தார். இதன் மூலம் பிக்பாஸ் 6 டைட்டில் வின்னர் பட்டத்தை அஸிம் பெற்றார். இதை அடுத்து அவருக்கு பிக்பாஸ் கோப்பை வழங்கப்பட்டது. அத்தோடு 50 லட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் கூடுதல் பரிசாக கார் ஒன்றும் வழங்கப்பட்டது. இரண்டாவது இடத்தை விக்ரமன் பிடித்துள்ளார்.