நாமினேட் செய்த கதிரவனை... கிழி கிழினு கிழித்தெடுத்த ஷிவின் - வீடியோ பார்த்து ஷாக்கான பிக்பாஸ் ரசிகர்கள்

By Ganesh AFirst Published Jan 9, 2023, 2:52 PM IST
Highlights

ஷிவின் அதிகமாக பேசுகிறார் என்று சொல்லி நாமினேட் செய்த கதிரவனை, இதெல்லாம் ஒரு காரணமா என கேட்டு ஷிவின் கிழி கிழினு கிழித்தெடுக்கும் புரோமோ வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி, தற்போது பைனலை நெருங்கி வருகிறது. தற்போது 90 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றிபெற்றதன் காரணமாக அமுதவாணன் முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். அதேபோல் ரச்சிதாவும் நேற்று எலிமினேட் செய்யப்பட்டதால் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே மீதம் உள்ளனர்.

அவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த வாரம் தான் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியின் கடைசி எவிக்‌ஷன் நடைபெற உள்ளது. இதற்கான நாமினேஷன் இன்று நடைபெற்றுள்ளது. நேரடி நாமினேஷனாக நடைபெற்று இதில் போட்டியாளர்கள் தாங்கள் வெளியேற்ற விரும்பும் போட்டியாளர்களின் முகத்தில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும்.

இதையும் படியுங்கள்... நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் தோல்வி... ‘விதி கரெக்டா தான் செஞ்சிருக்கு’ - வடிவேலுவை பொளந்துகட்டிய முத்துக்காளை

of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/OxcYYth702

— Vijay Television (@vijaytelevision)

அப்படி ஒவ்வொருவரும் தங்களது கருத்தினை சொல்லி நாமினேட் செய்தனர். தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் கதிரவன், தான் ஷிவினை நாமினேட் செய்வதாக கூறினார். ஷிவின் அதிகமாக பேசுகிறார் என்று சொல்லி நாமினேட் செய்தார் கதிரவன். இதைக்கேட்டு கடுப்பான ஷிவின், 2 பேர் சண்டை போட்டுகிட்டு இருக்கும்போது வாங்க மனசுவிட்டு பேசலாம்னு கூப்பிட முடியாதுனு சொல்கிறார். 

அப்போது ஷிவினை பேச விடாமல் இடையிடையே குறுக்கீடு செய்கிறார் கதிரவன். இதன் பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் சூடுபிடிக்கிறது. அதன் காட்சிகள் தான் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் இடம்பெற்று உள்ளது. முன்னதாக வெளிவந்த புரோமோவில் அசீமை அனைவரும் நாமினேட் செய்யும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/bTGsT92mI8

— Vijay Television (@vijaytelevision)

இதையும் படியுங்கள்... எத்தனை கஷ்டங்கள் வந்தாலும்.. சினிமா மீதான காதலை இழக்கவில்லை - சாகுந்தலம் பட விழாவில் கண்ணீர்விட்டு அழுத சமந்தா

click me!