பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடத்தப்பட்டு வரும் டிக்கெய் டூ பினாலே டாஸ்க்கில் அசீம் தொடர்ந்து தோல்வி அடைந்ததை பார்த்த நெட்டிசன்கள் அவரை டம்மி பீஸ் என கிண்டலடித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. பைனலுக்கு இன்னும் ஓரிரு வாரங்களே எஞ்சி உள்ளதால், இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் Ticket to Finale (TTF) டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெல்லும் போட்டியாளருக்கு நேரடியாக பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
இதற்காக இந்த வாரம் முழுக்க ஏராளமான டாஸ்க்குகள் அடுத்தடுத்து நடத்தப்படும் இதன் இறுதியில் யார் அதிக மதிப்பெண்களை பெற்றிருக்கிறாரோ அவர்தான் இந்த TTF டாஸ்க்கின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதில் பெரும்பாலும் உடல் வலிமையை சோதிக்கும் டாஸ்க்குகள் தான் அதிகளவில் கொடுக்கப்படும். அப்படி இதுவரை நடந்து முடிந்த டாஸ்க்குகளில் அசீம் பெரும்பாலான டாஸ்க்குகளில் தோல்வியை தழுவிவிட்டார்.
இதையும் படியுங்கள்... பிரின்ஸ் பட தோல்விக்கு பொறுப்பேற்று... நஷ்ட ஈடு வழங்கிய சிவகார்த்திகேயன் - எத்தனை கோடி கொடுத்தார் தெரியுமா?
இன்று நடைபெறும் சைக்கிள் டாஸ்க்கிலும் அவர் தாமதமாக அமர்ந்ததாக கூறி பாதியிலேயே வெளியேற்றப்பட்டுள்ளார். இதனை ஒப்புக்கொள்ள முடியாத அசீம், ரச்சிதா மற்றும் ஷிவினிடம் சண்டைபோட்டு, அடுத்த டாஸ்க்கில் உங்கள் இருவரையும் வச்சி செய்வேன் பாருங்க என்று வீர வசனமெல்லாம் பேசியுள்ளார். இதுகுறித்த காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் இடம்பெற்று உள்ளது.
இதைப்பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள், அசீமை டம்மி பீஸ் என வறுத்தெடுத்து வருகின்றனர். என்ன பாஸ் வாய் மட்டும் தானா என கமெண்ட் செய்து கிண்டலடித்தும் வருகின்றனர். இதே நிலைமை தான் விக்ரமனுக்கும், அவரும் இந்த TTF டாஸ்க்கில் சரிவர விளையாடவில்லை. பைனலுக்கு தகுதி பெறுவார்கள் என எண்ணப்பட்ட இருவரும் இப்படி டாஸ்க்குகளில் கோட்டைவிட்டு வருவதால் அவர்களது ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.
and 🔥 both really doing ttf task well💯 ivange pandrathu kude and aale panne mudiyale. ithule vechi seyvaram😂 pic.twitter.com/J50m1iPqum
— Kisyen (@KisyenB)and TTF evalo serious na ah task unga fun side ah ipadi kattakudathu nenga rendu perum🤣 https://t.co/WSpKqWg89r
— பொன்னி@பொய்யாமொழி🤐 (@Ponnipoiyamozh1)ஒன்லி பேச்சு மட்டும் தான் யோவ் அசீம் 😂
— VKS (@VkSamy13)Adhuku mudhala task ah vilayadamum vayila vada suda kudathu
— Mohammed Aziz (@itsmeaziz07)Can't accept his defeat! Oru physical task kuda olunga pana THUPPU ila pecha paaru
— gudvibe01 (@Lokesh68748473)பேசுறானே தவிர ஒன்னும் பன்ன மாட்றானே
— Villa (@Villa_Rshh)இதையும் படியுங்கள்... துணிவு படத்தால் முறியடிக்க முடியாத... பீஸ்ட் டிரைலர் சாதனையை தட்டித்தூக்கி முதலிடம் பிடிக்குமா வாரிசு டிரைலர்?