என் வழி தனி வழி... சர்ப்ரைஸாக பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ் - ஷாக்கான ஹவுஸ்மேட்ஸ்

By Ganesh A  |  First Published Dec 28, 2022, 1:12 PM IST

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், சர்ப்ரைஸாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் பேமஸ் ஆன டாஸ்க் என்றால் அது ஃபிரீஸ் டாஸ்க் தான். ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடத்தப்பட்டு வரும் இந்த டாஸ்க்கில் உள்ளே உள்ள போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து செல்வார்கள். அந்த வகையில் நேற்று மைனாவின் மகனும், கணவரும் வந்தனர். பின்னர் ஷிவினின் நண்பர்கள் வந்தார்கள். இறுதியாக அமுதவாணனின் மனைவி மற்றும் குழந்தைகள் வந்திருந்தனர்.

அதேபோல் இன்றும் அந்த டாஸ்க் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று ரச்சிதாவின் அம்மாவும், அவரது அண்ணனும் முதலில் வந்தனர். அடுத்ததாக மணிகண்டாவின் குடும்பத்தில் இருந்து அவரது மனைவி, மகன் மற்றும் அம்மா ஆகியோர் மெயின் டோர் வழியாக எண்ட்ரி கொடுத்தனர். 

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... மீண்டும் சோழ தேசத்துக்கு செல்ல ரெடியா... பொன்னியின் செல்வன் 2 பற்றி வெளியாக உள்ள சர்ப்ரைஸ் அப்டேட் இதுதான்

அதேபோல் மணிகண்டாவின் சகோதரியும் நடிகையுமான ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் சர்ப்ரைஸாக அதாவது கன்பெஷன் ரூம் வழியாக சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்தார். இவர்கள் வீட்டுக்கு வந்ததும் உற்சாகத்தில் தலைகால் புரியாமல் ஓடி வரும் மணிகண்டன் அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாசமழை பொழிந்துள்ளார்.

of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/uipC1aKcpY

— Vijay Television (@vijaytelevision)

இதுகுறித்த புரோமோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள டிரைவர் ஜமுனா என்கிற திரைப்படம் வருகிற டிசம்பர் 30-ந் தேதி ரிலீசாக உள்ளது. அந்த படத்தில் மணிகண்டனும் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளதால், அதற்கான புரமோஷனுக்காக கூட ஐஸ்வர்யா ராஜேஷ் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... 10 படத்துல நடித்த கங்கனாவுக்கு பத்மஸ்ரீ விருதா..! இதெல்லாம் ரொம்ப ஓவர் - மத்திய அரசை சாடிய வாரிசு பட நடிகை

click me!