ஃபிரீஸ் டாஸ்க்கில் முதலாவதாக செல்லும் மைனாவின் கணவர் யோகி, பிக்பாஸ் ஷோவுக்கு நீ தகுதியே இல்ல என சொல்லி மைனாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களை மிகவும் கவர்ந்த டாஸ்க் என்றால் அது ஃபிரீஸ் டாஸ்க் தான். ஒவ்வொரு சீசனிலும் இந்த டாஸ்க் எப்போது நடத்தப்படும் என அங்குள்ள போட்டியாளர்களைப் போல் ரசிகர்களும் ஆவலோடு காத்திருப்பார்கள். அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் இந்த வாரம் முழுக்க ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட உள்ளது.
இந்த டாஸ்க்கில் இன்று முதல் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டுக்கு வர உள்ளனர். முதலாவதாக மைனாவின் கணவர் யோகியும் அவரது மகன் துருவ்வும் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். அப்போது மகனை 70 நாட்களுக்கு பின் பார்த்த உற்சாகத்தில் ஆனந்த கண்ணீர்விட்ட மைனா, அவனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து தன் பாசத்தை வெளிப்படுத்தினார்.
இதையும் படியுங்கள்... அட்ராசக்க... டல் அடிக்கும் டி.ஆர்.பி-யை எகிற வைக்க பிக்பாஸ் அறிவித்த பலே டாஸ்க் - வைரலாகும் புரோமோ இதோ
இதையடுத்து துருவ் மற்ற ஹவுஸ்மேட்ஸ் உடன் விளையாடிக் கொண்டிருந்தபோது மைனாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்த கார்டன் ஏரியாவுக்கு சென்ற அவரது கணவர் யோகேஷ், அவர் எப்படி விளையாடுகிறார் என்பது பற்றியும், வெளியில் அவருக்கு உள்ள வரவேற்பு பற்றியும் பேசி உள்ளார். தற்போது அது குறித்த புரோமோ வெளியாகி உள்ளது.
of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/ptSZcB3yIU
— Vijay Television (@vijaytelevision)அதில், மைனா நீ இந்த கேமுக்கு லாயக்கே இல்ல, இந்த பிக்பாஸ் ஷோவுக்கும் உனக்கும் தகுதியே இல்ல என கூறும் யோகி, நீ ஒரு தப்பு நடக்கும் போது தட்டிக்கேட்க மறுப்பதாகவும் சுட்டிக்காட்டும் அவர், 100 சதவீதம் நீ கேமை விளையாடினால் தான் நல்லா விளையாடுறியா இல்லையா என மக்களுக்கு ஒரு எண்ணம் வரும் என அந்த புரோமோவில் யோகி பேசி உள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் நாங்க மனசுல நெனச்சதெல்லாம் அப்படியே சொல்லிட்டியேபா என யோகியை பாராட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... விஜய் அரசியலுக்கு வருவாரா... மாட்டாரா? - தாய் ஷோபா கொடுத்த சிம்பிள் விளக்கம்