பிக்பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.யை எகிற வைக்கும் விதமாக அசத்தல் டாஸ்க் ஒன்றை கொடுத்து போட்டியாளர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் ஆரவாரத்துடன் தொடங்கினாலும், போகப் போக டல் அடித்து வருகிறது. தற்போது 75 நாட்களுக்கு மேல் ஆகியும் இவர் தான் தன்னுடைய பேவரைட் போட்டியாளர் என ரசிகர்கள் தேர்ந்தெடுத்து சொல்லும் அளவுக்கு இந்த சீசனில் ஒருவர் கூட இல்லை என்பது தான் கசப்பான உண்மை.
அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டி.ஆர்.பி.யும் கடந்த சீசனைக் காட்டிலும் இந்த சீசன் மிகவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இறுதிப்போட்டி நெருங்கி வரும் நிலையில், தற்போது டி.ஆர்.பி.யை எகிற வைக்கும் விதமாக அசத்தல் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார் பிக்பாஸ். அது தான் ஃபிரீஸ்(Freeze) டாஸ்க்.
இதையும் படியுங்கள்... ‘வாரிசு’ விஜய்யை விட மிகவும் கம்மியாக சம்பளம் வாங்கிய ‘துணிவு’ அஜித்... காரணம் என்ன?
இந்த டாஸ்க்கின் ஸ்பெஷல் என்னவென்றால், உள்ளே இருக்கும் போட்டியாளர்களின் உறவினர்கள் இந்த டாஸ்க்கின் போது வீட்டுக்குள் அனுப்பப்படுவர். கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக வெளியுலகில் இருந்து யாரையும் பார்க்காமல் இருக்கும் ஹவுஸ்மேட்ஸை உற்சாகப்படுத்தும் விதமாக இந்த டாஸ்க் நடத்தப்படும். இதில் பல எமோஷனல் தருணங்களும் அடங்கி இருக்கும்.
of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/RePUFbpBLM
— Vijay Television (@vijaytelevision)அந்த வகையில், தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் எதிர்பார்க்கலேல என சொல்லி ஃபிரீஸ் டாஸ்க் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிக்பாஸ். இதையடுத்து மைனாவின் கணவர் யோகி மற்றும் அவரது மகன் துருவ் ஆகியோர் வீட்டுக்குள் வருகின்றனர். பின்னர் ஷிவினின் தங்கை வருகிறார். இதையடுத்து அமுதவாணனின் மனைவி மற்றும் குழந்தைகள் வரும் காட்சிகள் இந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளன. இதன்மூலம் இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடே கண்ணீர் கடலில் மிதக்கப் போகிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... முரட்டு சிங்கிளாக 57-வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான் கான் - களைகட்டிய பர்த்டே பார்ட்டி போட்டோஸ் இதோ