பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய விதியை மீறிய ஜனனி... வெளியேற்றப்படுகிறாரா? - வெளியான ஷாக்கிங் புரோமோ

By Ganesh A  |  First Published Dec 17, 2022, 5:18 PM IST

பிக்பாஸ் வீட்டில் உள்ள முக்கியமான விதி என்னவென்றால், எந்த ஒரு போட்டியாளரும் தாங்கள் நாமினேட் செய்யப்போகும் போட்டியாளரின் பெயரை வெளியே சொல்லக்கூடாது. 


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இந்த வாரம் ஏடிகே எலிமினேட் ஆகிவிட்டார் என கூறப்படுவதால் மீதம் 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி இருப்பர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் விதிக்கப்படும் அடிப்படை விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும். அவற்றை மீறினால் அந்த போட்டியாளர் வெளியேற்றப்படவும் வாய்ப்புகள் உண்டு. அந்த வகையில் இதுவரை ஒருவர் மட்டுமே வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட பரணி தான். இவர் சுவற்றின் மீது ஏறி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே தப்ப முயன்றதை அடுத்து அவரை உடனடியாக வெளியேற்றிவிட்டார் பிக்பாஸ்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்...  ஊ சொல்றியா, என் சாமி பாடல் இடம் பெற்ற புஷ்பா வெளியாகி ஓராண்டு நிறைவு: புஷ்பா மரமும் வளர்ந்துவிட்டது!

today's promow contentis based and Amudhavanan conversation backstabbing pic.twitter.com/5knug0ljAi

— Raj kumar (@RajkumarSundare)

அதேபோல் பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்றுமொரு முக்கிய விதி என்னவென்றால், எந்த ஒரு போட்டியாளரும் தாங்கள் நாமினேட் செய்யப்போகும் போட்டியாளரின் பெயரை வெளியே சொல்லக்கூடாது. அதேபோல் பிறரிடம் இந்த போட்டியாளரை நாமினேட் செய்யுமாறு கலந்தாலோசிக்க கூடாது.

ஆனால் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கின் போது, ஜனனி அமுதவாணனிடம் தான் ஷிவினை நாமினேட் செய்ய உள்ளதாக கூறுகிறார். அதேபோல் நீயும் செய் என்று அமுதவாணனையும் கூறுகிறார். இதனைத் தான் இந்த வாரம் விதிமீறல் நடந்து உள்ளதாக சுட்டிக்காட்டி ஜனனி மற்றும் அமுதவாணனிடம் இதுபற்றி கமல் விசாரிக்கிறார். இதுகுறித்த புரோமோவும் தற்போது வெளியாகி உள்ளது. பிக்பாஸ் விதிகளை மீறியதன் காரணமாக ஜனனி வெளியேற்றப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/XJ4tdbA84u

— Vijay Television (@vijaytelevision)

இதையும் படியுங்கள்... அஜித்துக்கு வில்லனாகிறாரா தனுஷ்?... விக்னேஷ் சிவன் இயக்கும் AK 62 படம் குறித்து காத்துவாக்குல வந்த அப்டேட்

click me!