சீன் போடாத... அடங்கு! அசீம் - ஏடிகே இடையே வெடித்த சண்டையால் பரபரப்பான பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ள அசீமும், ஏடிகே-வும் டாஸ்க்கின் போது சண்டையிட்டுக் கொண்ட புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Azeem Fight with ADK during task in BiggBoss season 6 Tamil

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. 67 நாட்களை எட்டியுள்ள இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த டபுள் எவிக்‌ஷனில் ராம் மற்றும் ஆயிஷா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டனர். தற்போது 11 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இவர்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு வாரந்தோறும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் சொர்க்க வாசிகள் மற்றும் நரகவாசிகள் என இரு அணிகளாக பிரிந்து போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இதில் இரு அணியினரும் ஒரு போட்டியாளரை மாற்றிக்கொள்வது பற்றி விவாதிக்கும் போது அசீம் - ஏடிகே இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

Latest Videos

இதையும் படியுங்கள்... காந்தாரா முதல் லவ் டுடே வரை... கம்மி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூலை வாரிக்குவித்த திரைப்படங்கள் ஒரு பார்வை

of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/fRJ9pw7YEc

— Vijay Television (@vijaytelevision)

இதில் சொர்க்க வாசிகள் டீமில் உள்ள ஏடிகேவை நரகவாசிகள் அணிக்கு கொண்டுவர விரும்புவதாக அசீம் கூறுகிறார். அப்போது ஏடிகே உணர்ச்சிவசப்படுவதாக அசீம் சொன்னதைக் கேட்டு கடுப்பான ஏடிகே, அப்படி இங்க யாருக்குமே கிடையாது என சொன்னதைக் கேட்டு ஷிவின் சிரிக்கிறார். இதனால் கடுப்பான ஏடிகே, யாராச்சும் சிரிச்சா அசிங்கமா கேட்பேன் என சொன்னதும் டென்ஷன் ஆன அசீம் எதிர்த்து கேள்வி கேட்டதும், நீ சீன் போடாத அடங்கு என ஏடிகே சொல்கிறார்.

அதெல்லாம் நீ சொல்லாத என அசீமும் பதிலுக்கு பதில் வாக்குவாதம் செய்யத் தொடங்கியதால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல்களும் ஏற்படுகின்றன. இதுகுறித்த புரோமோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

இதையும் படியுங்கள்... மகள் ஐஸ்வர்யா உடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

vuukle one pixel image
click me!
vuukle one pixel image