ரச்சிதா மற்றும் தனலட்சுமி கடந்த வாரம் நடந்த டாஸ்கில் வெற்றிபெற்று நாமினேஷன் ஃப்ரீ ஜோனில் உள்ளதால் அவர்கள் இருவரையும் யாராலும் நாமினேட் செய்ய முடியாது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களாக ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் தாங்கள் வெளியேற்ற நினைப்பவரை நேரடியாக நாமினேட் செய்தனர். இதன் அடிப்படையில் கடந்த இரண்டு வார இறுதியில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்ஸி ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்றதன் காரணமாக எலிமினேட் செய்யப்பட்டனர்.
இந்த வாரம் வழக்கம் போல் கன்பெஷன் ரூமில் தான் நாமினேஷன் நடைபெற்றது. இதில் ஒவ்வொருவராக வந்து தாங்கள் வெளியேற்ற விரும்பும் போட்டியாளர்களின் பெயர்களை சொல்லி நாமினேட் செய்தனர். இதில் அதிகளவில் நாமினேட் செய்யப்பட்ட மூன்று போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த புரோமோ வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... மாற்றுத்திறனாளிகளின் மனதை வென்ற பொன்னியின் செல்வன்... படம் பார்த்து சிலாகித்துபோன மாணவ, மாணவிகள்
of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/BB7kd6Xn5w
— Vijay Television (@vijaytelevision)அதன்படி இந்த வாரம் அதிகம்பேரால் நாமினேட் செய்யப்பட்டது ஆயிஷா, அசீம், ராம் ஆகியோரது பெயர்கள் தான். இவர்கள் மூவர் தான் ஹவுஸ்மேட்ஸால் டார்கெட் செய்யப்பட்ட போட்டியாளர்கள். இதுதவிர அமுதவாணன், ஜனனி, ஷிவின், மைனா ஆகியோரின் பெயர்களும் நாமினேஷனில் சிக்க வாய்ப்புள்ளது.
இதுதவிர எஞ்சியுள்ள போட்டியாளர்களில் ரச்சிதா, தனலட்சுமி மற்றும் மணிகண்டன் ஆகியோரை யாராலும் நாமினேட் செய்ய முடியாது. ஏனெனில் அவர்கள் மூவரில் ரச்சிதா மற்றும் தனலட்சுமி கடந்த வாரம் நடந்த டாஸ்கில் வெற்றிபெற்றதன் காரணமாக நாமினேஷன் ஃப்ரீ ஜோனில் உள்ளனர். மணிகண்டன் இந்த வார தலைவர் டாஸ்கில் வெற்றி பெற்றதால் அவரது பெயரையும் நாமினேட் செய்ய முடியாது.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டும் ‘கட்டா குஸ்தி’... காத்துவாங்கும் ‘டிஎஸ்பி’ - 3 நாள் வசூல் நிலவரம் இதோ