ஸ்ட்ராங் பிளேயர் இல்ல... நீ ஒரு அட்டக்கத்தி! அசீமை வெளுத்துவாங்கிய விக்ரமன் - அனல்பறக்கும் பிக்பாஸ் புரோமோ இதோ

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் எலியும், பூனையுமாக இருந்து வரும் அசீமும், விக்ரமனும் தற்போது மீண்டும் மோதிக்கொண்ட புரோமோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

BiggBoss season 6 contestant Vikraman says azeem is not a strong player he is just like a card knife

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் 50 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் வாரந்தோறும் டாஸ்க் கொடுக்கப்பட்டு அதில் மோசமாக விளையாடிய போட்டியாளரை தேர்ந்தெடுத்து அவரை சிறையில் அடைப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் நடந்த ஏலியன் - ஆதிவாசி டாஸ்க் நேற்றுடன் முடிந்தது.

இந்த டாஸ்க்கின் இறுதியில் மோசமாக விளையாடிய போட்டியாளரை தேர்ந்தெடுக்க ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் லிவ்விங் ஏரியாவில் அமர்ந்திருந்தபோது, முதலாவதாக எழுந்து செல்லும் விக்ரமன், அசீம் தான் மோசமாக விளையாடியதாக சொல்கிறார். டாஸ்க்கின் இடையே அமுதவாணன் மீது அசீம் கைவைத்தது ரொம்ப பெரிய தப்பு. கவனத்தை ஈர்ப்பதற்காகவே அவர் இப்படி செய்வதாக கூறுகிறார் விக்ரமன்.

Latest Videos

இதையும் படியுங்கள்... கலக்கலா?... சொதப்பலா? விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி’ எப்படி இருக்கிறது? - விமர்சனம் இதோ

of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/aL8THyBCbD

— Vijay Television (@vijaytelevision)

இதையடுத்து வரும் அசீம், விக்ரமன் பெயரை தேர்ந்தெடுக்கிறார். நான் ஒரு ஸ்ட்ராங் ஆன போட்டியாளர், என்னைப்பற்றி பேசினால் பாப்புலர் ஆகிவிடலாம் என்பதற்காக நீங்கள் அப்படி பேசுகிறீர்கள் என விக்ரமனை பார்த்து கூறுகிறார் அசீம். 

அசீம் சொன்னதைக் கேட்டு சிரிக்கும் விக்ரமன், உடனடியாக எழுந்து வந்து, என்னைப் பொறுத்தவரை நீங்க ஒரு அட்டக்கத்தி தான் ஸ்ட்ராங் பிளேயர்லாம் கிடையாது என தரமான பதிலடி கொடுக்கிறார். அசீம் - விக்ரமன் இடையேயான இந்த புரோமோ தான் தற்போது சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... முடிவுக்கு வரும் 2022... டிசம்பரில் மட்டும் இத்தனை தமிழ் படங்கள் ரிலீசா..? வியக்க வைக்கும் கோலிவுட் லைன்-அப்

vuukle one pixel image
click me!
vuukle one pixel image