பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக வலம் வரும் அசீம், திடீரென மயங்கி விழுந்ததை பார்த்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் பதறிப்போயினர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாளர் என்றால் அது அசீம் தான். இந்நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே வாரந்தோறும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார். குறிப்பாக இரண்டாவது வாரத்தில் சக போட்டியாளர்களை தரக்குறைவாக பேசியதன் காரணமாக அசீமுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
அதன்பின் ஒரு வாரம் அமைதியாக இருந்த அவர், பின்னர் மீண்டும் தன் சுயரூபத்தை காட்டத் தொடங்கி விட்டார். இந்த வாரம் முழுவதும் அவரின் நடவடிக்கை அனைவரையும் முகம் சுழிக்க செய்யும் வகையில் தான் இருந்து வருகிறது. இந்த வாரம் அவர் கேப்டனாகவும் ஆகிவிட்டதால், அவரை எலிமினேட் கூட செய்ய முடியாத நிலையில் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... விநியாகஸ்தராக விஸ்வரூப வெற்றிகண்ட உதயநிதி..! அடேங்கப்பா... ஒரே வருடத்தில் அவர் சம்பாதித்தது இத்தனை கோடியா?
தற்போது நடைபெற்று வரும் ஏலியன் டாஸ்கில், அமுதவாணனிடம் சண்டையிட்ட அசீம், நேற்று அவரது கழுத்த பிடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், அசீம் மயங்கி விழும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Oh my gosh this is too bad
This man suffers a lot💔 pic.twitter.com/b9oaMtbtuZ
கார்டன் ஏரியாவில் உள்ள சோஃபாவில் அமர்ந்து கதிரவனுடன் பேசிக்கொண்டிருக்கும் அசீம், திடீரென மயங்கி விழுந்ததை பார்த்து பதறிப்போன சக போட்டியாளர்கள் அவருக்கு முதலுதவி அளிக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. சிலர் அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கமெண்ட் செய்து வந்தாலும், ஏராளமானோர் அசீம் மயங்கி விழுந்ததே நடிப்பு தான் என சாடி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்ஷனா..? அப்போ வெளியேறப்போவது யார்... யார் தெரியுமா?