லூசு மாதிரி கதைக்காதீங்கனு சொன்ன ஜனனியை வெளுத்துவாங்கிய அசீம்... பரபரக்கும் பிக்பாஸ் புரோமோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்கின் போது ஜனனியும், அசீமும் சண்டை போட்டுக்கொண்ட காட்சிகள் அடங்கிய புரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

Azeem fight with janany in biggboss house during task

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில் போட்டியாளர் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் ஒரு அணியினர் ஏலியனாகவும், மற்றொரு அணியினர் ஆதிவாசியாகவும் இருக்கின்றனர். இந்த டாஸ்கின் விதிப்படி ஏலியன் அணியில் இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வந்து ஆதிவாசி அணியினர் என்ன செய்தாலும் சிரிக்கவோ, கோபப்படவோ கூடாது.

அப்படி சிரித்தாலோ, கோபப்பட்டாலோ அவர்கள் தோற்றதாக அறிவிக்கப்படுவர். அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் ஏலியன் அணியை சேர்ந்த மணிகண்டன் கோபப்பட்டதாக ஆதிவாசி டீமில் உள்ள ஷிவின், அசீம் ஆகியோர் கூறுகின்றனர். இதற்கு அசீம் கோபப்பட்டது வேற ரியாக்‌ஷன் வேற என மணிகண்டனிடம் சொல்லிக்கொண்டிருக்க, அருகில் இருந்த ஏலியன் அணியை சேர்ந்த ஜனனி, லூசு மாதிரி கதைக்காதீங்கனு அசீமை பார்த்து சொல்கிறார்.

Latest Videos

இதையும் படியுங்கள்... Robo Shankar: ஸ்பெஷல் நாளில்... ரோபோ ஷங்கருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூப்பர் ஸ்டார் ஸ்டார்!

of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/TqVhnxGH5Y

— Vijay Television (@vijaytelevision)

இதனால் டென்ஷன் ஆன அசீம், நீ எப்படி என்னை லூசுனு சொல்லுவ என அவரிடம் வாக்குவாதம் செய்ய தொடங்குகிறார். உடனே என்ன செய்வது என்று தெரியாமல் ஜனனி கத்தி கூச்சல் போட ஆரம்பிக்கிறார். இறுதியில் இனிமேல் என்னை அசீம் என்று பெயர் சொல்லி கூப்பிட்டால் அவ்வளவு தான் என ஜனனிக்கு வார்னிங் கொடுக்கும் காட்சிகளும் அந்த புரோமோவில் இடம்பெற்று உள்ளன.

ஜனனி இந்த பேச்சுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இப்படி பேசிக்கொண்டிருந்தால் இந்த வாரமே வெளியேற்றிவிடுவார்கள் என ஜனனியை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... சைலண்டாக நடக்கும் திருமண வேலைகள்! நடிகை கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் டும்டும்டும்.. மாப்பிள்ளை யார்?

vuukle one pixel image
click me!
vuukle one pixel image