பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த ஓபன் நாமினேஷனில் தேர்வானவர்கள் யார்... யார் என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் நேற்று ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கும் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறும் ஹவுஸ்மேட்ஸில் மக்கள் யாருக்கு குறைவான வாக்குகளை அளிக்கிறார்களோ அந்த போட்டியாளர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்.
இதையும் படியுங்கள்... பிரிந்து சென்ற மனைவியுடன்... ஜோடியாக வந்து தியேட்டரில் படம் பார்த்த பாலா - ஆச்சர்யத்தில் ரசிகர்கள்
of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/O0iaxcC9Mw
— Vijay Television (@vijaytelevision)பிக்பாஸ் 6 நிகழ்ச்சி ஆரம்பமானதில் இருந்து ரச்சிதாவிற்கு நூல்விடுவதை மட்டும் முழு நேர வேலையாக செய்து வந்த ராபர்ட் மாஸ்டர் நேற்று வெளியேற்றப்பட்டார். இதையடுத்து போட்டியாளர்களின் கவனம் ரச்சிதா பக்கம் திரும்பி உள்ளது. அவர் வீட்டில் சமைப்பதை தவிர எந்த வேலையும் செய்யாமல், அமைதியாகவே இருந்து வருவதாக கூறி இந்த வாரம் நாமினேஷனில் ஏராளமானோர் ரச்சிதாவை தேர்ந்தெடுத்து உள்ளனர்.
கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் ஓபன் நாமினேஷன் தான் நடத்தப்பட்டு உள்ளது. இதில் தாங்கள் வெளியேற்ற விரும்பும் இரண்டு போட்டியாளர்கள் யார் என்பதை தேர்வு செய்து அவர்கள் முகத்தில் கேக் கிரீமை பூச வேண்டும் என பிக்பாஸ் சொல்கிறார். இதையடுத்து ஒவ்வொருவராக வந்து நாமினேட் செய்கின்றனர். அதன்படி இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் ரச்சிதா, குயின்சி, மைனா, கதிரவன், ஜனனி, ஷிவின், தனலட்சுமி, மணிகண்டன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.
இதையும் படியுங்கள்... இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்கல... அதற்குள் அஜித்தின் ‘ஏகே 62’ பட ஓடிடி உரிமையை தட்டிதூக்கிய பிரபல நிறுவனம்