நடுராத்திரி திருடுறாரு... பிக்பாஸ் வீட்டில் அசீம் செய்யும் திருட்டு வேலைகளை லிஸ்ட் போட்டு சொன்ன தனலட்சுமி

Published : Nov 24, 2022, 12:40 PM IST
நடுராத்திரி திருடுறாரு... பிக்பாஸ் வீட்டில் அசீம் செய்யும் திருட்டு வேலைகளை லிஸ்ட் போட்டு சொன்ன தனலட்சுமி

சுருக்கம்

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள தனலட்சுமி, அசீம் மீது திருட்டு புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களுக்கு வாரந்தோறும் டாஸ்க் ஒன்று கொடுக்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு நீதிமன்ற டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு நடந்த முக்கிய பிரச்சனைகள் குறித்து வழக்கு தொடுக்க முடியும்.

அந்த வழக்கை பிக்பாஸ் ஏற்றுக்கொண்டால் அதற்கான விசாரணை நடத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும். இந்நிலையில், இந்த டாஸ்க்கில் தனலட்சுமி அசீம் மீது திருட்டு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்... ஓய்வெடுக்க சொன்ன டாக்டர்கள்! அப்போ பிக்பாஸ் நிகழ்ச்சி?

அதில் அவர் கூறியுள்ளதாவது : “பிக்பாஸ் வீட்டில் தேவையான விஷயமே உணவு தான். நீங்கள் அனுப்பும் கொஞ்ச நஞ்ச பழங்களும், தயிரும் காணாமல் போகிறது. அதனை அசீம் தான் அடிக்கடி எடுத்து சாப்பிடுகிறார். இதைப்பற்றி கேட்டால், அது அழுகிப்போன பழம் என்று ஒவ்வொருத்தர் கிட்டயும் ஒரு காரணம் சொல்கிறார்.

வாழைப்பழம் எல்லாமே காணாமல் போய்விடுகிறது. ஒரு நபருக்கு 2 பழங்கள் என்று தான் கொடுக்கிறீர்கள். ஆனால் அவர் ஒருநாளைக்கு இரண்டு பழங்கள் என நினைத்துக் கொண்டு தினசரி சாப்பிட்டு விடுகிறார். இதை நேரடியாக கேட்கவும் முடியவில்லை. தயிரை நடுராத்திரி எடுத்து சாப்பிட்டு காலிசெய்துவிடுகிறார். அதனால் நான் அசீம் மீது புகார் கொடுக்கிறேன்” என தனலட்சுமி அந்த வீடியோவில் கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... விஜயகாந்த் படக்கதையை திருடி.. ஜவான் படத்துக்காக பட்டி டிங்கரிங் பார்த்தாரா அட்லீ? - விசாரணையில் வெளிவந்த உண்மை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் சேதுபதியை கலாய்த்த கானா வினோத்... காமெடி ஜட்ஜால் பிக் பாஸ் கோர்ட்டில் சிரிப்பலை..!
பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?