காதல் பிரேக் அப் ஆன மாதிரி கதறி அழும் ராபர்ட் மாஸ்டர்... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

Published : Nov 18, 2022, 03:40 PM IST
காதல் பிரேக் அப் ஆன மாதிரி கதறி அழும் ராபர்ட் மாஸ்டர்... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

சுருக்கம்

டாஸ்கின் போது ரச்சிதா தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி ராபர்ட் மாஸ்டர் கதறி அழுததை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் எண்ட்ரி கொடுத்த முதல் நாளில் இருந்தே நடிகை ரச்சிதாவிற்கு நூல்விட்டு வருகிறார் ராபர்ட் மாஸ்டர். அவருடன் நட்புடன் பழகி வந்த ரச்சிதா, ஒரு கட்டத்தில் நீங்க எனக்கு அண்ணன் மாதிரி என ஓப்பனாக சொல்லிவிட்டார். அதன்பின்னரும் விடாமல் பின் தொடர்ந்து அவருக்கு அன்புத்தொல்லை கொடுத்து வருகிறார் ராபர்ட்.

இந்த வாரம் முழுக்க நடைபெற்ற அரண்மனை டாஸ்க்கில் ராபர்ட் ராஜாவாகவும், ரச்சிதா ராணியாகவும் வேடமணிந்து பங்கேற்றனர். இதில் பிக்பாஸ் ரச்சிதாவுக்கு கொடுத்த சீக்ரெட் டாஸ்க்கின் படி அவர் வீட்டில் இருந்த நகைகளை மன்னருக்கு தெரியாமல் திருடி வைக்க வேண்டும். பிக்பாஸ் கொடுத்த இந்த சீக்ரெட் டாஸ்க்கை அசீம் மற்றும் கதிரவனுடன் சேர்ந்து செய்தார் ரச்சிதா.

இதையும் படியுங்கள்...  எப்போதும் என் உயிர், உலகம் நீதான் தங்கமே! குழந்தை பிறந்த பின்பும் குறையாத காதலுடன் நயன்தாராவை வாழ்த்திய விக்கி

இன்று இந்த டாஸ்க் முடிந்ததும், அவர்கள் எவ்வாறு திருடினார்கள் என்பதை வீடியோவாக போட்டு காட்டினர். அதைப்பார்த்த பின்னர் அப்செட் ஆன ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி கதறி அழுதுள்ளார். இதுகுறித்த புரோமோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. ரச்சிதா அவரிடம் பேசி சமாதானம் செய்ய முயன்ற போதும், தயவு செஞ்சு என்னிடம் பேசாத என கூறிவிடுகிறார் ராபர்ட்.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் ராபர்ட் மாஸ்டரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். இவரென்ன லவ் பெயிலியர் ஆனவர் போல் இப்படி அழுகிறார். இதெல்லாம் பார்ப்பதற்கு கிரிஞ்சாக உள்ளது என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... லெஜண்ட் சரவணனுடன் இயக்குனர் சுந்தர் சி திடீர் சந்திப்பு...! பின்னணி என்ன?

PREV
click me!

Recommended Stories

விஜய் சேதுபதியை கலாய்த்த கானா வினோத்... காமெடி ஜட்ஜால் பிக் பாஸ் கோர்ட்டில் சிரிப்பலை..!
பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?