வம்பிழுத்த அசீம்... கோபத்தில் கெட்ட வார்த்தையில் திட்டிய ஏடிகே - பரபரப்பான பிக்பாஸ் வீடு... வைரல் புரோமோ இதோ

அசீம் பேசி வம்பிழுத்ததால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஏடிகே, அவரை கெட்ட வார்த்தையில் திட்டிய காட்சிகள் அடங்கிய புரோமோ வெளியாகி உள்ளது.

Azeem vs ADK fight in BiggBoss season 6 Tamil Promo viral

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க அரண்மனை டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு வேடம் கொடுக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரச்சிதாவும், ராஜகுருவாக விக்ரமனும், படைத்தளபதியாக அசீமும், பாதுகாவலர்களின் தலைவனாக ஏடிகேவும் இருந்து வருகின்றனர்.

நேற்று தான் தூங்கிக் கொண்டிருந்தபோது ஏடிகே தன்னை பற்றி காமெடியாக செய்த விஷயத்தை சீரியஸாக பேசி சண்டை இழுந்த அசீமிடம், தான் இனி உன்னிடம் பேசவே மாட்டேன் என கோபித்துக் கொண்டு சென்றார் ஏடிகே. இதன்பின் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சண்டையிட்டுக் கொண்டு உள்ளனர்.

Latest Videos

இதையும் படியுங்கள்... டிசம்பரில் ரிலீஸ் இல்லை... தள்ளிப்போனது தனுஷின் வாத்தி - புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/P8k6nEo1qF

— Vijay Television (@vijaytelevision)

பாதுகாவலனாக இருக்கு ஏடிகே அரண்மனையில் உள்ள பொருட்களை திருடியவர்களை கை, கால்களை கட்டிப்போட்டு தண்டனை கொடுத்துள்ளார். இதைப்பார்த்த அசீம், உனக்கெல்லாம் மனிதாபிமானமே கிடையாதா என்று கேட்க, இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை வெடித்துள்ளது. 

திரும்ப திரும்ப வந்து அசீம் பேசி வம்பிழுத்ததால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ஏடிகே, அவரை கெட்ட வார்த்தையில் திட்டிவிட்டு இந்த டாஸ்க்கை விளையாடப்போவதில்லை என கூறும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள புரோமோவில் இடம்பெற்று உள்ளது.

இதையும் படியுங்கள்... முதல் விமர்சனமே முதல்வரின் விமர்சனம்..! கலகத் தலைவன் படம் பார்த்து மு.க.ஸ்டாலின் என்ன சொன்னார் தெரியுமா?

vuukle one pixel image
click me!
vuukle one pixel image