காரி துப்பி கொடுப்பேன் நீ சாப்பிடுவியா! அசீம் - விக்ரமன் இடையே மீண்டும் வெடித்த சண்டை.. களேபரமான பிக்பாஸ் வீடு

Published : Nov 16, 2022, 12:35 PM IST
காரி துப்பி கொடுப்பேன் நீ சாப்பிடுவியா! அசீம் - விக்ரமன் இடையே மீண்டும் வெடித்த சண்டை.. களேபரமான பிக்பாஸ் வீடு

சுருக்கம்

ரெட் கார்டு கொடுத்த பின் கடந்த இரண்டு வாரங்களாக பிக்பாஸ் வீட்டில் சைலண்டாக இருந்து வந்த அசீம், தற்போது மீண்டும் விக்ரமனுடன் சண்டையிட்டு உள்ளார்.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள அசீம் முதன் மூன்று வாரம் சக போட்டியாளர்களுடன் சண்டையிட்டு வந்ததால் அவருக்கு ரெட் கார்டு கொடுத்து கமல்ஹாசன் வார்னிங்கும் கொடுத்தார். குறிப்பாக விக்ரமன் மற்றும் ஆயிஷாவை ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கமல் வார்னிங் கொடுத்ததால் கடந்த இரண்டு வாரங்களாக சைலண்டாக இருந்து வந்த அசீம், வேதாளம் முருங்க மரம் ஏறுன கதை போல் தற்போது மீண்டும் கத்தி ஆக்ரோஷமாக விக்ரமனுடன் சண்டையிட்டுள்ளார். இதுகுறித்த புரோமோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... அரண்மனையாக மாறிய பிக்பாஸ் வீடு... ராஜா ராணியாக ரவுசு காட்டும் ராபர்ட் - ரச்சிதா! வைரலாகும் புரோமோ

தற்போது பிக்பாஸ் வீட்டில் அரண்மனை டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ராஜகுருவாக இருக்கும் விக்ரமனை பார்த்து, உங்க சாப்பாட்டில் எச்சை காரி துப்பி கொடுப்பேன் சாப்பிடுவீங்களா என படைத்தளபதியாக இருக்கும் அசீம் கேட்கிறார். இதைக்கேட்டு கடுப்பான விக்ரமன், ஏய் இப்படியெல்லாம் பேசாதீங்க என எச்சரிக்கிறார்.

இதன்பின் விக்ரமனை அடிக்க பாயும் அசீம், யார்ரா நீ என்ன பார்த்து ஏய்-னு பேசுற என ஒருமையில் பேச தொடங்கியதால் பதறிப்போன சக ஹவுஸ்மேட்ஸ் அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயல்கின்றனர். இதைப் பார்க்கும் போது இந்த வாரம் அசீமுக்கு ஆப்பு கன்பார்ம் என்பது உறுதியாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... இப்போ காசு.. பணம் எல்லாம் இருக்கு... ஆனா! சிறுவயதில் பட்ட கஷ்டங்களை பற்றி பேசி கலங்கிய ராஷ்மிகா

PREV
click me!

Recommended Stories

Bigg Boss-ல் விஜய் சேதுபதியை விட ரம்யா கிருஷ்ணனுக்கு அதிக சம்பளமா? அடேங்கப்பா ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?
Bigg Boss : மைனிங் மாஃபியாஸ் டீமின் கொட்டத்தை அடக்க டிடிஎஃப் வாசன் போட்ட பக்கா ஸ்கெட்ச்... தரமான சம்பவம் வெயிட்டிங்..!