பிக்பாஸ் வீட்டுக்கு வந்தீங்களா.. இல்ல பிக்னிக் வந்தீங்களா! ராபர்ட் மாஸ்டரை வறுத்தெடுக்கும் ஜனனி- வைரல் புரோமோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கில் ஜனனி, ராபர்ட் மாஸ்டரை வறுத்தெடுக்கும் காட்சிகளுடன் கூடிய புரோமோ வெளியாகி உள்ளது.

BB Roast task given for BiggBoss season 6 contestants

பிக்பாஸ் நிகழ்ச்சி 35 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் வாரந்தோறும் ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த வாரம் மகேஸ்வரி குறைவான வாக்குகளை பெற்றிருந்ததன் காரணமாக வெளியேற்றப்பட்டார். தற்போது வீட்டில் 16 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரந்தோறும் ஒரு லக்சுரி பட்ஜெட் டாஸ்க் நடத்தப்படும். இதில் வெற்றிபெறும் போட்டியாளர்களுக்கு புள்ளிகள் வழங்கப்பட்டு, அதை வைத்து அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்படுவர். அந்த வகையில் இந்த வாரம் பிபி ரோஸ்ட் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது.

Latest Videos

இதையும் படியுங்கள்...  விஜய் டிவி 'குக் வித் கோமாளி' ரித்திகாவுக்கு திருமணம்..! அட மாப்பிள்ளை யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்!

of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/FBL9qEC2WW

— Vijay Television (@vijaytelevision)

இதில் போட்டியாளர்கள் ஜோடி ஜோடியாக பிரிந்து ஒருவரை ஒருவரை வறுத்தெடுக்க வேண்டும். அப்படி ராபர்ட் மாஸ்டரும், ஜனனியும் ஒரு ஜோடியாக இந்த டாஸ்க்கை விளையாடுகின்றனர். அப்போது அனைவரையும் டார்லிங்... டார்லிங்னு கூப்பிடுறீங்களே, நீங்க பிக்பாஸ் வீட்டுக்கு வந்திருக்கீங்களா.. இல்ல பிக்னிக் வந்திருக்கீங்களா என ராபர்ட்டை பார்த்து ஜனனி கேட்கும் கேள்விக்கு சக ஹவுஸ்மேட்ஸ் விழுந்து விழுந்து சிரிக்கும் காட்சிகள் புரோமோவில் இடம்பெற்று உள்ளன.

இதையும் படியுங்கள்... சில ‘நாய்’யால சீக்காளி ஆனேன் - இயக்குனர் ஷங்கரை சீண்டினாரா வடிவேலு?... சர்ச்சையை கிளப்பிய அப்பத்தா பாடல்

vuukle one pixel image
click me!
vuukle one pixel image