பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள ராஜா ராணி டாஸ்க்கில் ராபர்ட் மாஸ்டரும், ரச்சிதாவும் ராஜா - ராணி வேடங்களை ஏற்றுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் விதவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு முழுவதும் அரண்மனையாக மாறி உள்ளது. அதில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும், ராணியாக ரச்சிதாவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
அதேபோல் அசீம் படைத்தளபதியாகவும், விக்ரமன் ஆலோசகராகவும், மணிகண்டா ராஜேஷ் இளவரசராகவும், ஜனனி இளவரசியாகவும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். ஏற்கனவே ரச்சிதாவை ஒருதலையாக காதலித்து சுற்றிவரும் ராபர்ட் மாஸ்டர், தற்போது டாஸ்கில் அவர் தனக்கு ஜோடியாக நடிப்பதால் ரொம்ப குஷியாகி விட்டார்.
இதையும் படியுங்கள்... விடாது கருப்பாய் துரத்தும் இரவின் நிழல் சர்ச்சை... எமோஷனல் ஆன இயக்குனர் பார்த்திபன்
of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/VgBslltOrP
— Vijay Television (@vijaytelevision)தற்போது இருவரும் ராஜா ராணி கெட் அப்பில் இருக்கும் காட்சிகளுடன் கூடிய புரோமோ வெளியாகி உள்ளது. இதில் ராஜா - ராணிக்காக உணவு சமைக்கும் போது அதில் உப்பை அள்ளிப்போட்ட பணியாளர்கள் மீது ரச்சிதா கோபமாக பொங்கி எழும் காட்சிகளும் இடம்பெற்று உள்ளது. இந்த புரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... சாண்டி மாஸ்டரின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த முன்னாள் மனைவி காஜல்... வைரலாகும் புகைப்படங்கள்