பிக்பாஸ் வீட்டில் பெண்கள் குளிப்பதை எட்டிப்பார்த்த அமுதவாணன்... வீடியோ வெளியானதால் பரபரப்பு

Published : Nov 23, 2022, 01:09 PM IST
பிக்பாஸ் வீட்டில் பெண்கள் குளிப்பதை எட்டிப்பார்த்த அமுதவாணன்... வீடியோ வெளியானதால் பரபரப்பு

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் உள்ள பாத்ரூமில் பெண் போட்டியாளர் ஒருவர் குளிக்கும் போது அதனை அமுதவாணன் எட்டிப்பார்க்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் தொலைக்காட்சிகளில் மக்கள் மத்தியில் அதிகம் பேமஸ் ஆன ரியாலிட்டு ஷோ என்றால் அது பிக்பாஸ் தான். இந்நிகழ்ச்சிக்கு கிடைத்து வரும் வரவேற்பு காரணமாக வருடந்தோறும் தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது. தமிழில் இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது. தற்போது 6-வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரை சாந்தி, அசல் கோளார், ஷெரினா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி ஆகிய 5 பேர் எலிமினேட் ஆகி உள்ளனர். இதுதவிர ஜிபி முத்து இரண்டாவது வாரத்திலேயே வெளியேறிவிட்டார். தற்போது 15 போட்டியாளர்களுடன் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சி 40 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நகைச்சுவை நடிகர் அமுதவாணனும் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். ஆரம்பத்தில் ஒரு சில வாரம் கலகலப்பாக காமெடி செய்துகொண்டு சுற்றி வந்த அமுதவாணன், தற்போது ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார். இதற்கு காரணம் ஜனனி உடன் அவர் பழகும் விதம் தான். இதனை கமல்ஹாசன் முன்னிலையில் ஹவுஸ்மேட்ஸ் சுட்டிக்காட்டியும் அவர் அதனை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

இதையும் படியுங்கள்... வெங்கட் பிரபுவின் ‘கஸ்டடி’யில் நாக சைதன்யா... மாஸான டைட்டில் உடன் வெளிவந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

தற்போது அமுதவாணன் குறித்த வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் வீட்டில் உள்ள பாத்ரூமில் பெண் போட்டியாளர் ஒருவர் குளிக்கும் போது வெளியே நிற்கும் அமுதவாணன், மைக்கை கழற்றி வைத்துவிட்டு, பாத்ரூம் இடைவெளியில் எட்டிப்பார்க்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்று உள்ளன. அப்போது அமுதவாணன் மைக்கை மாட்டுங்க என பிக்பாஸ் குரல் ஒலித்ததும் அவர் பதறும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன.

அமுதவாணனின் இந்த அசிங்கமான செயலுக்கு பிக்பாஸ் ரசிகர்களும் நெட்டிசன்களும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சிலர் உள்ளே ஜனனி குளித்துக் கொண்டிருந்தார் என்று கூறுகின்றனர். சிலரோ அது ஜனனி அல்ல ஷிவின் என்று வாதிட்டு வருகின்றனர். ஜனனியோ, ஷிவினோ யாராக இருந்தாலும் அவர்கள் குளிப்பதை எட்டிப்பார்ப்பது தவறு, அதனால் அமுதவாணனை கமல்ஹாசன் கண்டிப்பதோடு மட்டுமின்றி அவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பிக்பாஸ் ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்...  மோசமடைந்த உடல்நிலை... நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி?

PREV
click me!

Recommended Stories

18 லட்சத்தோடு பிக் பாஸ் வீட்டை விட்டு கிளம்பிய பிரபலம்... அவசரப்பட்டுட்டியே தலைவா என குமுறும் ரசிகர்கள்
பாரு - கம்ருதீன் கேம் ஓவர்... ரெட் கார்டு கொடுத்த விஜய் சேதுபதி - பிக் பாஸ் ரசிகர்கள் செம ஹாப்பி..!