அசீமின் திமிர் பேச்சால் கடுப்பாகும் அமுதவாணன், நீ என்ன ரவுடியாடா என கேட்கும் காட்சியுடன் கூடிய புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடைபெற்று வரும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஏலியன்களாகவும், ஆதிவாசியாகவும் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இதில் ஏலியன் அணியினர் வீட்டின் உள்ளேயும், ஆதிவாசி அணியினர் கார்டன் ஏரியாவிலும் இருக்க வேண்டும். ஏலியன் அணியினர் ஆதிவாசி அணியினரிடம் இருந்து கல்லையும், ஆதிவாசி அணியினர் ஏலியன் அணியில் இருந்து பூவையும் கைப்பற்றுவதே டாஸ்க் ஆகும்.
ஏலியன் அணியினர் கொடுக்கும் டார்ச்சர்களை பொறுத்துக்கொண்டு ஆதிவாசி அணியினர் கோபப்படாமல் இருந்தால் அவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு பூ கொடுக்கப்படும், அதேபோல் ஆதிவாசி அணியினர் செய்யும் டார்ச்சர்களை பொறுத்துக்கொண்டு ஏலியன் அணியினர் வெற்றிபெற்றால் அவர்களுக்கு கல் கொடுக்கப்படும்
இதையும் படியுங்கள்... அரசியல்வாதியாகும் மக்கள் செல்வன்... கர்நாடக முன்னாள் முதல்வரின் பயோபிக்கில் விஜய் சேதுபதி..?
of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/sibxyfbuow
— Vijay Television (@vijaytelevision)இறுதியில் யாரிடம் அதிக அளவிலான கல்லும், பூவும் இருக்கிறதோ அவர்கள் அடுத்தவாரத்திற்கான நாமினேஷனில் இருந்து தப்பித்து விடுவார். இதில் ஆதிவாசி அணியில் இருக்கும் அசீம், தன் அணியினரிடையே நேற்று சண்டையிட்ட நிலையில், இன்று ஏலியன் அணியில் உள்ள அமுதவாணனிடம் சண்டை போட்டுள்ளார்.
இதற்கான புரோமோ வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது. அதில் அசீமின் திமிர் பேச்சால் கடுப்பாகும் அமுதவாணன், நீ என்ன ரவுடியாடா என கேட்கிறார். தொடர்ந்து அசீம் ரவுடியிசம் செய்வதாக விக்ரமனும் கூறுகிறார். இதனால் இந்த வாரமும் கமலிடம் அசீம் திட்டுவாங்க போகிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... பிரபாஸ் உடன் காதலா..? உண்மையை மறைக்க மனமின்றி ஓப்பனாக போட்டுடைத்த பாலிவுட் நடிகை