டபுள் எவிக்‌ஷனால் கணக்கு மாறப்போகுது... பிக்பாஸில் குரூப்பாக விளையாடுபவர்களை வறுத்தெடுக்க ரெடியான கமல்

போட்டியாளர்கள் எத்தனை வேஷம் போட்டாலும், நல்ல மழை பெய்யும்போது உண்மை முகம் தெரிஞ்சிடுது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Kamalhaasan hints about BiggBoss 6 tamil double eviction

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 9-ந் தேதி தொடங்கியது. 21 போட்டியளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். அதிலும் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் நடைபெற உள்ளதால், யார் வெளியேறப்போகிறார்கள் என்கிற பரபரப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்த வார நாமினேஷன் பட்டியலில் ஏடிகே, அசீம், ஜனனி, ராம், ஆயிஷா மற்றும் கதிரவன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இதில் இருந்து இருவர் தான் இந்த வாரம் எலிமினேட் ஆக உள்ளனர். இதில் ராம் தான் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதால் அவர் வெளியேறுவது உறுதி. எஞ்சியுள்ள ஏடிகே மற்றும் ஆயிஷா இருவருக்கும் இடையே வாக்கு வித்தியாசம் குறைவாக இருப்பதால் இவர்களில் யார் வெளியேறுவார்கள் என்பது இன்னும் உறுதியாகவில்லை. 

Latest Videos

இதையும் படியுங்கள்...  சில்லா சில்லா vs ரஞ்சிதமே... எந்த பாட்டுக்கு மவுசு அதிகம்? வாரிசு பட சாதனையை தட்டிதூக்கியதா துணிவு?

of - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. pic.twitter.com/mfvp4KiP41

— Vijay Television (@vijaytelevision)

இந்நிலையில், தற்போது இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான கமலின் புரோமோ வெளியாகி உள்ளது. அதில் இந்த வாரம் போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொரு கதாபாத்திரமாக நடித்ததைப் பற்றி பேசியதாவது : “இவங்க எத்தனை வேஷம் போட்டாலும், நல்ல மழை பெய்யும்போது உண்மை முகம் தெரிஞ்சது. இருந்தாலும் அதற்கு இன்னொரு வேஷம் போட்டிடுறாங்க. எத்தனை வேஷம் போட்டாலும் உண்மை பிதுக்கிகிட்டு வெளிய வரத்தான் செய்யுது.

இவங்களுக்கு இவங்கள தான் பிடிக்கும். இவங்கள தான் சப்போர்ட் பண்ணுவாங்கங்குற சார்பு வெளிப்பட்டுக்கிட்டே இருக்கு. இம்முறை நடக்கும் 2 எவிக்‌ஷன்ல இந்த கணக்கு எப்படி மாறுதுனு பார்ப்போம்” என கமல் சொல்வதை பார்த்தால் இன்று செம சம்பவம் காத்திருப்பது போல தெரிகிறது.

இதையும் படியுங்கள்... காந்தாரா சர்ச்சை முதல் கன்னடத்தில் நடிக்க தடை வரை... சர்ச்சைகளுக்கு ராஷ்மிகா கொடுத்த நெத்தியடி பதில்

vuukle one pixel image
click me!
vuukle one pixel image