வேறலெவலில் மிமிக்ரி செய்த அமுதவாணன் மகன்... குலுங்கி குலுங்கி சிரித்த பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் - வைரல் வீடியோ இதோ

Published : Dec 27, 2022, 03:39 PM IST
வேறலெவலில் மிமிக்ரி செய்த அமுதவாணன் மகன்... குலுங்கி குலுங்கி சிரித்த பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் - வைரல் வீடியோ இதோ

சுருக்கம்

ஃபிரீஸ் டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள அமுதவாணனின் மூத்தமகன் அங்குள்ள போட்டியாளர்கள் மாதிரியே மிமிக்ரி செய்து அசத்தி உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃபிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தினரும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்வார்கள். அந்த வகையில் இன்று முதலாவதாக மைனாவின் கணவர் யோகேஷ்வரனும், அவரது மகன் துருவ்வும் சென்றிருந்தனர். அதுகுறித்த புரோமோ காட்சிகளும் ஏற்கனவே வெளியாகி இருந்தன.

இதையடுத்து அமுதவாணனின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ளனர். அவரது மனைவி மற்றும் மகன்கள் 3 பேரும் உள்ளே சென்றனர். இதுவரை அமுதவாணனுக்கு கல்யாணம் ஆன விஷயம் கூட பெரும்பாலானவர்களுக்கு தெரியாத நிலையில், அவருக்கு 3 பசங்களா என ஒரு பக்கம் பலரும் ஆச்சர்யமாக பார்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... எம்.ஜி.ஆர்-ஐ என் தந்தை சுட்டது ஏன்?... கருணாநிதி மட்டும் இல்லேனா அவர ஜெயில்லயே முடிச்சிருப்பாங்க - ராதா ரவி

அவர்கள் எண்ட்ரி கொடுக்கும் புரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதும், அவரது மனைவி அமுதவாணனை கட்டியணைத்து முத்தமிடுகிறார். பின்னர் அமுதவாணனின் மூத்தமகன் அங்குள்ள போட்டியாளர்கள் பற்றி மிமிக்ரி செய்து அசத்தி உள்ளார்.

முதலில் அசீம், பின்னர் ஷிவின், அடுத்ததாக விக்ரமன் என ஒவ்வொருவரின் உடல்மொழி, நடை என அனைத்தையும் அப்படியே செய்துகாட்டி உள்ளார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் அமுதவாணனின் மகன் அவரைப் போலவே மிமிக்ரியில் அசால்ட்டு பண்ணுவதாக பதிவிட்டு வருகின்றனர். இந்த புரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... மகனின் பிறந்தநாளை தடபுடலாக கொண்டாடிய யோகிபாபு... அமைச்சர், திரைப்பிரபலங்கள் பங்கேற்பு - வைரலாகும் போட்டோஸ்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் சேதுபதியை கலாய்த்த கானா வினோத்... காமெடி ஜட்ஜால் பிக் பாஸ் கோர்ட்டில் சிரிப்பலை..!
பிரஜனுக்கு சம்பளத்தை கிள்ளி கொடுக்காமல் அள்ளிக் கொடுத்த பிக் பாஸ்... அடேங்கப்பா இத்தனை லட்சமா?