கதிரவன் ஜாலியாக தனது காதலியுடன் ரொமான்ஸ் செய்வதை பார்த்து ஷிவின் கண்ணீர்விட்டு அழும் காட்சிகள் பிக்பாஸ் புரோமோவில் இடம்பெற்று உள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முழுக்க ஃபிரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் 3 போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் செவ்வாய்க்கிழமை மைனா, அமுதவாணன் ஆகியோரது உறவினர்களும், ஷிவினின் நண்பர்களும் வந்திருந்தனர்.
இதற்கு அடுத்ததாக நேற்று புதன்கிழமை மணிகண்டன், ரச்சிதா மற்றும் ஏடிகே ஆகியோரின் குடும்பத்தினர் வந்திருந்தனர். இன்று முதலாவதாக கதிரவனின் வீட்டில் இருந்து அவரது தாயார் வந்திருந்தார். அதுமட்டுமின்றி சர்ப்ரைஸாக அவரது காதலியும் இந்த பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததைப் பார்த்து கதிரவன் கண்கலங்கினார். இதுகுறித்த காட்சிகள் முதலாவது புரோமோவில் இடம்பெற்று இருந்தது.
இதையும் படியுங்கள்... மாஸ்க்கை கழட்டியதும் மரியாதை கொடுத்தார்கள்... விமான நிலையத்தில் நடந்த கொடுமையை விவரித்த சித்தார்த்
கதிரவனின் காதலி வந்த உடன், ஷிவினுக்கு முகம் வாடிப்போனது. ஏனெனில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஷிவின் கதிரவனுக்கு நூல்விட்டு வந்தார். எப்போதுமே ஷிவினுக்கு அவர்மீது தனி கிரஷ் இருந்தது. கதிரவனின் காதலி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததும், ஏடிகே, அமுதவாணன், அசீம், மணி ஆகியோர் பாட்டுப்பாடி ஷிவினை கலாய்த்தனர். அதுகுறித்த காட்சிகள் இரண்டாவது புரோமோவில் இடம்பெற்று இருந்தது.
இதையடுத்து தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில், கதிரவன் ஜாலியாக தனது காதலியுடன் ரொமான்ஸ் செய்வதை ஷிவின் பெட்ரூமில் படுத்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்போது அருகில் இருக்கும் அமுதவாணன் ஷிவினை பாட்டுப்பாடி கலாய்த்ததால் மனமுடைந்து போன ஷிவின் கண்ணீர்விட்டு அழும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
இதையும் படியுங்கள்... சேலையில் படுகிளாமராக போட்டோஷூட் நடத்தி.. கவர்ச்சியில் உச்சம் தொட்ட பிக்பாஸ் லாஸ்லியா - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்