சர்வ சாதாரணமாக மக்களோடு மக்களாக வரிசையில் நின்று ஒட்டு போட்ட முதல்வர்...

By sathish kFirst Published Apr 18, 2019, 9:17 AM IST
Highlights

சொந்த ஊரில் எந்தவித பந்தாவும் இல்லாமல் மக்களோடு மக்களாக  வரிசையில் நின்று முதல்வர் வாக்களித்தது ஒட்டுமொத்தமாக்களின் கவனத்தையும் ஈர்த்தது.

சொந்த ஊரில் எந்தவித பந்தாவும் இல்லாமல் மக்களோடு மக்களாக  வரிசையில் நின்று முதல்வர் வாக்களித்தது ஒட்டுமொத்தமாக்களின் கவனத்தையும் ஈர்த்தது.

இன்று நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் வேகமாக பதிவாகி வருகிறது. அரசியல் தலைவர்கள்,சினிமா பிரபலங்கள் தங்கள் வாக்கினை அந்தந்த தொகுதிகளில் காலையிலேயே வரிசையில் நின்று செலுத்தி வருகின்றனர். 

தனது சொந்த  தொகுதியில் தன் கட்சி வேட்பாளரை நிறுத்தி உள்ளார். தான் நிறுத்திய வேட்பாளர் வெற்றிபெற்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  இந்நிலையில் இன்று நடக்கும் வாக்குப்பதிவில் வாக்களிக்க தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் வாக்களிக்க கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே கடைசி கட்ட பிரசாரத்தை இங்கே முடித்தார். 

இந்நிலையில், தந்து சொந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்தான் இன்று காலை 8 மணிக்கு முதல்வர் வாக்களிக்க வருவார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. மூத்தவர் என்றதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போன்ற பந்தாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தான் வாக்களிக்கப்போவது சொந்த கிராமம், சுத்தி உள்ளவர்கள் அண்ணன், தம்பி, மாமன், மச்சான் என சுற்றி இருப்பதால் அப்படியான எந்த பந்தாவும் வேண்டாம் என சொல்லிவிட்டாராம். வீட்டுக்கு பக்கத்திலேயேதான் இந்த வாக்கு சாவடி உள்ளது. அதனால் நடந்தே வந்தார் முதல்வர். 

ஏராகவே சொன்னதைப்போல, சரியாக 8 மணிக்கு வெள்ளை-சேட்டி, விபூதி என பக்காவாக வாக்குச்சாவடிக்கு வந்தார். அப்போது ஏராளமான போலீசார் முதல்வரின் பாதுகாப்பு பின் நின்றிருந்தாலும், சயரு விலகியே இருந்துள்ளனர். அந்த ஊர் மக்கள் ஏராளமானோர் நடந்து போய் கொண்டிருந்தனர். சாவடிக்கு வந்த முதல்வர், கியூவில் போய் நின்று கொண்டார். அங்கு மக்களோடு மக்களாக இணைந்து தன் தனது வாக்கை செலுத்தினார்.

ஒரு முதல்வர் எந்தவித பந்தாவும் இல்லாமல், சொந்த ஊரில் சர்வ சாதாரணமாக ஒரு கிராமத்து வாக்குச் சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று  வாக்களித்தது ஒட்டுமொத்தமாக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

click me!