வான்டடா வீடியோகால் செய்து ஆடைகளை அவிழ்த்து நின்ற பெண்.. 2 செகண்ட் பார்த்த பாவத்துக்கு 7 லட்சம் அழுத தொழிலதிபர்

By Ezhilarasan BabuFirst Published Aug 6, 2022, 2:35 PM IST
Highlights

வீடியோகாலில் வந்து பெண் நிர்வாணமாக பேசிய நிலையில், அவருடன் பேசிய இளைஞரிடம் 7.5 லட்சம் ரூபாய் மிரட்டி பறிக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. இது வீடியோ கால் ச*** நூதன மோசடி என்பது தெரியவந்துள்ளது

வீடியோகாலில் வந்து பெண் நிர்வாணமாக பேசிய நிலையில், அவருடன் பேசிய இளைஞரிடம் 7.5 லட்சம் ரூபாய் மிரட்டி பறிக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. இது வீடியோ கால் ச*** நூதன மோசடி என்பது தெரியவந்துள்ளது. 

தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு பக்கம் மனித சமூகத்தின் வாழ்க்கைமுறையை வேகப்படுத்தியுள்ள நிலையில், மறுபுறம் மனித சமூகத்தை பல்வேறு வகையில் வாட்டி வதைத்து வருகிறது, சில கெட்ட எண்ணம் படைத்தவர்கள், இத்தொழில் நுட்பங்களை தங்களது குரூர திட்டங்களுக்கு பயன்படுத்துவது தான் இதற்கு காரணம் ஆகும். விதவிதமான மோசடி ஆப்கள், இளைஞர்களை குறி வைத்து வலைவிரிக்கும் ஆபாச வலை தளங்கள், புகைப்படத்தை தவறாக சித்தரித்து பணம் பறிக்கும் தந்திரங்கள் என நாள்தோறும் அரங்கேறி வருகிறது.

இந்தவகையில் மும்பையை சேர்ந்த ஒரு நபர் ச*** ஆப்பில் 7.5 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததை வேதனையுடன் புகாராக கொடுத்துள்ளார். அந்த புகார் விவரம் பின்வருமாறு:-  நான் ஒரு தனியார் நிறுவனம் நடத்தி வருகிறேன், மும்பை சாண்டாகிரஸ் கிழக்கு பகுதியில் உள்ள எனது நண்பரின் வீட்டில் ஜூலை 14ஆம் தேதி தங்கியிருந்தபோது, எனது பேஸ்புக்கில் அங்கித் சர்மா என்ற இளம்பெண் பிரண்ட் ரெக்வஸ்ட் கொடுத்தார், அதைத் தொடர்ந்து அவர் என்னுடன் உரையாடினார்.

இதையும் படியுங்கள்: நான் யாரையும் காபி சாப்பிட கூப்பிடல.. அவர் இதை நிரூபித்தால் பாஜகவை விட்டு விலகுறேன்.. நடிகை விஜயலட்சுமி. 

பின்னர் திடீரென வீடியோ கால் செய்த அந்தப் பெண், தனது ஆடைகளை அவிழ்க்க தொடங்கினார், உடனே நான் அதை துண்டித்து விட்டேன், மீண்டும் என்னை அந்தப்பெண் அழைத்தார், எனது வாட்ஸ்அப் எண்ணிற்கு கால் செய்தார், அப்போது மீண்டும் ஆடைகளை முழுவதுமாக கழட்டி காட்டினார், எனது முகத்தை கேமிராவில் காட்டும்படி கூறினார், அப்போது  ஏதோ தவறு நடக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன், பிறகு நான் அதை துண்டித்து விட்டேன், அந்த பக்கத்தையும் பிளாக் செய்துவிட்டேன், ஆனால் மறுநாளே எனது போனுக்கு வீடியோ கிளிப் ஒன்று வந்தது.

இதையும் படியுங்கள்:  திருமணம் ஆனதை மறைத்து இளம் பெண்ணுடன் லிவிங் டுகெதர்..இஸ்டத்துக்கு உல்லாசம். இறுதியில் நடந்த பயங்கரம். 

அதில் அந்தப் பெண்ணுடன் நான் பேசிய வீடியோ கால் ரெக்கார்ட் பதிவாகியிருந்தது. நாங்கள் சைபர் க்ரைம் போலீஸ் என்று அதில் குறிப்பிட்டிருந்ததுடன், என்னுடன் வீடியோ காலில் பேசிய அங்கித் சர்மா தற்கொலை செய்து கொண்டுவிட்டதாகவும், அதற்கு நான்தான் காரண் என்றும் கூறி மிரட்டினர், பின்னர் அந்த வீடியோவை டெலிட் செய்ய வேண்டுமென்றால், 2.5 லட்சம் பணம் தர வேண்டும் என்று கேட்டனர். நானும் கொலை வழக்கில் சிக்கிக் கொள்ளக்கூடாது என பயந்து கேட்ட பணத்தைக் கொடுத்தேன்.

பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு தர வேண்டும் என கூறி 5 லட்சம் கேட்டனர். அதையும் எப்படியோ புரட்டி அனுப்பிவைத்தேன். ஆனால் அப்போதும் அவர்களின் தொல்லை ஓயவில்லை, ஒரு கட்டத்தில் அவர்கள் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது, ஆனால் தொடர்ந்து என் மீது எப்ஐஆர் வழக்கு பதிவு செய்வதாக அவர்கள் மிரட்டி வந்தனர். இதுவரை 7.5 லட்ச ரூபாய் அவர்களிடம் கொடுத்து விட்டேன், எனவே இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, இதே போல நாடு முழுவதும் பல புகார்கள் வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

click me!