நடுரோட்டில் வைத்து இளம்பெண்ணை இப்படியா செய்வீங்க.. கணவனை அலேக்கா தூக்கிய போலீஸ்..!

Published : Jun 27, 2022, 02:11 PM IST
நடுரோட்டில் வைத்து இளம்பெண்ணை இப்படியா செய்வீங்க.. கணவனை அலேக்கா தூக்கிய போலீஸ்..!

சுருக்கம்

சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பெற்றோர் அறிவுரையால் கடந்த 17ம்தேதி பிரகாஷ் வீட்டிற்கு திரும்பினார். அன்று மாலை கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

நடுரோட்டில் வைத்து இளம்பெண்ணை கொடூரமாக கொன்று ஏரியில் சடலத்தை வீசிய கொடூர கணவனை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்ததனர். 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.என்.புரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவரது மனைவி மோகனா என்கிற ரோஜா(23). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணமான சில நாட்களுக்கு பிறகு பிரகாஷ் தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவி ரோஜாவை துன்புறுத்தியுள்ளார். இதனால் அடிக்கடி கணவருடன் கோபித்துக்கொண்டு ரோஜா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிடுவாராம்.

இதையும் படிங்க;- அழகிகளை வைத்து ஹைடெக் விபச்சாரம்.. ஒரு மணிநேரத்திற்கு 20 ஆயிரம் முதல் 30 லட்சம் வரை.. கோடிகளில் புரண்ட பிஸ்னஸ்

இதேபோல் சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பெற்றோர் அறிவுரையால் கடந்த 17ம்தேதி பிரகாஷ் வீட்டிற்கு திரும்பினார். அன்று மாலை கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த ரோஜா தனது தாய் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது பிரகாஷ், தனது பைக்கில் பின்தொடர்ந்து சென்று ரோஜாவை வழிமறித்து நிறுத்தினார். நடுரோட்டிலேயே இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையும் படிங்க;-  "உன்னை விட உன் தங்கை செமையா இருக்கா".. மச்சினியுடனான உல்லாசத்தை கண்டித்த மனைவி படுகொலை.!

இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ், அங்கிருந்த கருங்கல்லால் ரோஜாவை சரமாரி தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்த அவரை, அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை ஏரியில் வீசிவிட்டு தப்பி விட்டார். மறுநாள் அவ்வழியாக சென்றவர்கள் ஏரியில் பெண் சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஏரியில் மிதந்த ரோஜாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, தலைமறைவாக இருந்த கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க;-  பணியில் சேர்ந்த முதல் நாள்.. தூக்கில் தொங்கிய நர்ஸ்... விரைந்து விசாரணையை தொடங்கிய போலீஸ்!

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!