பெண்ணை கட்டிப்போட்டுவிட்டு கணவர் செய்த வெறித்தனமான காரியம்.. மிரண்டு அதிர்ந்துபோன மக்கள்..!

Published : Jun 27, 2022, 12:32 PM IST
பெண்ணை கட்டிப்போட்டுவிட்டு கணவர் செய்த வெறித்தனமான காரியம்.. மிரண்டு அதிர்ந்துபோன மக்கள்..!

சுருக்கம்

 இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய குழந்தை இல்லை.  இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. 

விருத்தாசலம் அருகே மனைவியை கட்டிப்போட்டு கணவர் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலுார் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவினங்குடி பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (32). கொத்தனாராக இருந்து வருகிறார். அவரது மனைவி ராஜலட்சுமி (25). ராஜலட்சுமி, கம்மாபுரம் அரசு தொடக்க பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிய குழந்தை இல்லை.  இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. 

இதையும் படிங்க;- என்னுடைய லவ்வரை கரெக்ட் செய்ய பாக்குறியா.. பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய காதலி.. சென்னையில் பயங்கரம்..!

வழக்கம் போல நேற்றும் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த நகராஜ் மனைவியை கட்டிப்போட்டு கத்தி எடுத்து வந்து மனைவி ராஜலட்சுமியின் கழுத்து, முதுகு, தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

இதையும் படிங்க;- உடலுறவினால் ஏற்பட்ட சம்பவம்.. எங்களுக்கு குழந்தை பிறக்காது - கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு

இதனையடுத்து, மனைவியை கொலை செய்த கத்தியோடு, அருகில் இருந்த கம்மாபுரம் காவல் நிலையத்தில் நாகராஜ் சரணடைந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதையும் படிங்க;-  ரூ.23 லட்சம், 300 சவரன் நகை போட்டும் வரதட்சணை கொடுமை.. குடும்பத்தோடு அலேக்கா தூக்கிய மதுரை போலீஸ்..!

அப்போது தான் ராஜலட்சுமிக்கு ஏற்கனவே திருமணமான விஷயம் தெரியவந்துள்ளது. நாகராஜை திருமணம் செய்வதற்கு முன்பே வேறொருவரை திருமணம் செய்துள்ளார். ஆனால், அவர் இறந்துவிட்டதால், இரண்டாவதாக நாகராஜை திருமணம் செய்துள்ளார். மேலும், மனைவியின் நடத்தையில் நாகராஜிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி