முகம் சிதைத்து ரத்த வெள்ளத்தில் கால்டாக்சி டிரைவர் படுகொலை.. செங்கல்பட்டில் பயங்கரம்..!

Published : Jun 27, 2022, 11:23 AM ISTUpdated : Jun 27, 2022, 11:28 AM IST
முகம் சிதைத்து ரத்த வெள்ளத்தில் கால்டாக்சி டிரைவர் படுகொலை.. செங்கல்பட்டில் பயங்கரம்..!

சுருக்கம்

சென்னையை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுனரை செங்கல்பட்டில் கொலை செய்து விட்டு காருடன் தப்பிச்சென்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னையை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுனரை செங்கல்பட்டில் கொலை செய்து விட்டு காருடன் தப்பிச்சென்ற குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

செங்கல்பட்டு மாவட்டம் வல்லம் பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் 108 ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மற்றும் ஊழியர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்த நபரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையும் படிங்க;- கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்கும் போது ஓயாமல் தொல்லை.. குழந்தையையின் கையை உடைத்த காமெறி பிடித்த தாய்.!

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடதத்திற்கு விரைந்த போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து சென்று, அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி, அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர அந்த வாலிபர் யார்? எதற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க;-  ஆசைவார்த்தை கூறி ஆசை தீர உல்லாசம்.. வேலை முடிந்ததும் வேலையை காட்டிய கள்ளக்காதலன்.. நடுங்கிபோன இளம்பெண்.!

இதையும் படிங்க;-   காதல் திருமணம் செய்த தம்பதி படுகொலை.. மகன் இறந்தது கூட தெரியாத தாய்.. அனாதையாக கிடைக்கும் மோகனின் உடல்.!

அதில், சோழிங்கநல்லூர் அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த பூங்காவனம் மகன் அர்ஜூன் (30) என்பதும், இவர் கால் டாக்ஸி டிரைவராக வேலை செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று, மர்ம கும்பல் ஒன்று இவரை சவாரிக்காக அழைத்துச்சென்று, வல்லம் பேருந்து நிலையம் அருகே, கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு, காருடன் தப்பிச்சென்றது தெரிய வந்தது. கொலை செய்துவிட்டு காரை திருடிச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!