அழகிகளை வைத்து ஹைடெக் விபச்சாரம்.. ஒரு மணிநேரத்திற்கு 20 ஆயிரம் முதல் 30 லட்சம் வரை.. கோடிகளில் புரண்ட பிஸ்னஸ்
குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு 20 ஆயிரம் என ஆரம்பித்து 30 லட்சம் வரை விபச்சாரத்தை நடத்தி வந்துள்ளது தெரியவந்தது. இதற்காக கல்லூரி மாணவிகள், குடும்ப தலைவிகள், சினிமா நட்சத்திரங்கள் என பலரையும் மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து விமானங்களில் டிக்கெட் புக் செய்து அவர்களை சென்னை வரவழைத்து விபச்சாரம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாலியல் தொழிலுக்கு என இந்தியா முழுவதும் ஒரு நெட்வொர்க்கையே உருவாக்கி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நவீன தொழில்நுட்பம் உலகையே மாற்றிவிட்டது. பாலியல் தொழிலில் அந்த தொழில்நுட்பத்தை புகுத்தி பல கோடிகளை சம்பாதித்து வந்த ஹைடெக் புரோக்கர் ஜோதி ரஞ்சன் ஜெனா (எ) ராகுல். இவர் மீது சென்னை முழுவதும் உள்ள காவல் நிலையம் மற்றும் விபச்சார தடுப்பு பிரிவில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், ஒடிசாவில் இருந்து கொண்டே சமூகவலைதளம் மூலமாக பாலியல் தொழில் செய்து வந்ததால் இவரை பிடிக்க முடியாமல் சென்னை போலீசார் கடந்த 10 ஆண்டுகளாக மேலாக தீவிரமாக தேடி வந்தனர்.
தற்போது ராகுல் ஓடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அம்மாநில காவல்துறையினர் உதவியுடன் ராகுல் மற்றும் அவரது நண்பரான கிருஷ்ணா சந்திரா ஸ்வைன் என்பவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
இலவச விளம்பரங்கள் பரிமாறப்படும் இணையதளமான லோகண்டோ மூலமாக விபச்சார தொழிலை இவர் நடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதற்கென பிரத்யோகமாக வாட்ஸ்அப் எண்ணை கொடுத்து அதன் மூலம் தங்களை தொடர்பு கொள்பவர்களிடம், தங்களிடம் இருக்கக்கூடிய பெண்களுடைய ஆபாச புகைப்படத்தை அனுப்பி வாடிக்கையாளரை கவர்ந்து இருக்கிறார்கள். அதன் பின்பாக சென்னையில் உள்ள கிண்டி, நுங்கம்பாக்கம், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கூடிய சர்வீஸ் அபார்ட்மெண்ட்கள் மற்றும் பிரபலமான ஹோட்டல்களில் ஆன்லைன் மூலமாக அறைகளை புக் செய்து விபச்சாரத்தை நடத்தி வந்துள்ளனர்.
குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு 20 ஆயிரம் என ஆரம்பித்து 30 லட்சம் வரை விபச்சாரத்தை நடத்தி வந்துள்ளது தெரியவந்தது. இதற்காக கல்லூரி மாணவிகள், குடும்ப தலைவிகள், சினிமா நட்சத்திரங்கள் என பலரையும் மும்பை உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து விமானங்களில் டிக்கெட் புக் செய்து அவர்களை சென்னை வரவழைத்து விபச்சாரம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆண்டிற்கு 3 முதல் 5 கோடி வரை சம்பாதித்து வந்ததும் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மேலும், இவரை நம்பி வரக்கூடிய வாடிக்கையாளர்களோ அல்லது பெண்களோ ராகுலுக்கு போன் செய்து இரண்டு ரிங் கொடுத்துவிட்டு, பின் ஒரு மணி நேரத்திற்குள் மீண்டும் போன் செய்யவில்லை என்றால் உடனடியாக, அவர்கள் ஓட்டல்களில் தங்கும் அறைகளை காலி செய்துவிட்டு சிட்டாய் பறந்து விடுவது வழக்கமாக வைத்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு செல்போன் அதில் பல வாட்ஸ் அப் குரூப்கள் என மொத்தம் 8 செல்போன்களை வைத்து விபச்சார தொழிலில் கொடிப்பட்டி பறந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.