ஒரு கையில் அரிவாள்.. மறு கையில் துண்டிக்கப்பட்ட மனைவியின் தலை.. கூச்சலிட்டு படியே அலறிய பொதுமக்கள்!

By vinoth kumar  |  First Published Feb 16, 2024, 3:41 PM IST

மேற்கு வங்கம் மாநிலம் புர்பா மேதினிபூர் மாவட்டத்தை அடுத்துள்ள சிஸ்திபூரை சேர்ந்தவர் கௌதம் குச்சாயத்(35). இவரது மனைவி புல்ராணி. அடிக்கடி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. 


ஒரு கையில் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையும், மற்றொரு கையில் அரிவாளையும் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேற்கு வங்கம் மாநிலம் புர்பா மேதினிபூர் மாவட்டத்தை அடுத்துள்ள சிஸ்திபூரை சேர்ந்தவர் கௌதம் குச்சாயத்(35). இவரது மனைவி புல்ராணி. அடிக்கடி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வழக்கம் போல இருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கௌதம் குச்சாயத் தாலி கட்டிய மனைவி என்று கூட பாராமல் கொடூரமாக கொலை செய்து தலையை தனியாக துண்டித்து எடுத்துள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: தண்ணீர் வாங்கி குடிக்க போன இடத்தில் பள்ளி மாணவனுக்கு காமப்பசி! பெண்ணை உல்லாசத்து அழைத்த போது நடந்த பயங்கரம்.!

 பின்னர் துண்டிக்கப்பட்ட தலை ஒரு கையிலும், மற்றொரு கையில் கத்தியுடன் பேருந்து நிறுத்தத்தில் சுற்றி திரிந்தார். இதை கண்ட பயணிகள் கூச்சலிட்ட படியே அலறி அடித்துக்கொண்டு ஓடினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நபரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.  இந்த கொடூர காட்சியை சிலர் தங்களின் செல்போன்களில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த போது ஓயாமல் அழுத குழந்தை.. கடுப்பான தாய்.. வெறியில் என்ன செய்தார் தெரியுமா?

click me!