பசுபதி பாண்டியன் கூட்டாளி கொலை வழக்கு; 6 பேருக்கு சிறை தண்டனை விதித்து கரூர் நீதிமன்றம் உத்தரவு

By Velmurugan s  |  First Published Feb 16, 2024, 10:39 AM IST

கரூர் அருகே பசுபதி பாண்டியன் ஆதரவாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு நபர்களுக்கு ஆயுள் தண்டனையும் இரண்டு நபர்களுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கரூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.


கரூர் மாவட்டம்  கருப்பத்துரைச் சேர்ந்தவர் கோபால் என்கிற கோபாலகிருஷ்ணன் (வயது 52). பசுபதிபாண்டியனின் தேவேந்திரகுல இளைஞரணியின் முக்கிய நிர்வாகியாக இருந்து வந்துள்ளார். இவர் மீது கொலை முயற்சி, வெடிகுண்டு தயாரித்தல் உள்ளிட்டப் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு காவல் துறையின் ரௌடி பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து பசுபதிபாண்டியன் படுகொலைக்குப் பிறகு, கடந்த சில ஆண்டுகளாக கரூர் லாலாப்பேட்டை அருகே உள்ள கருப்பத்தூர் என்னும் சொந்த கிராமத்தில் அவர் விவசாயம் செய்து வந்தார். இதனிடையை கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி அதிகாலை கோபாலகிருஷ்ணன் வீட்டின் முன்பு உள்ள விவசாய தோட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். 

Latest Videos

தருமபுரியில் விடுதியில் குழந்தை பெற்றெடுத்த அரசு கல்லூரி மாணவி; அதிர்ச்சியில் வார்டன்

இச்சம்பவம் குறித்து லாலாபேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குளித்தலை டிஎஸ்பி ஸ்ரீதர் தலைமையிலான 3 தனிப்படைகள் குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் கொலை விவகாரத்தில் திருநெல்வேலியைச் சேர்ந்த கூலிப்படைக்குத் தொடர்பு இருப்பதை கண்டறிந்த காவல்துறையினர், கொலைக்கு உறுதுணையாக இருந்த கரூர் லாலாப்பேட்டை கருப்பத்தூரைச் சேர்ந்த ராஜா சரவணன், சுந்தர், ரவிவர்மா என்கின்ற பாம் ரவி, குமுளி ராஜ்குமார், கருப்பு ரவி, மனோஜ், கார்த்தி, ஜெயராமன் சுரேஷ், நந்தகுமார், கருப்பு குமார் ஆகிய 11 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கருப்பு ரவி தவிர பத்து நபர்கள் கைது செய்து பட்டனர்.  

ஆட்சிக்கு வந்து 3 வருடம் ஆச்சு...இது போன்ற செயல் திமுக அரசின் ஈவு இரக்கமற்ற தன்மையை காட்டுகிறது- சீறும் ஓபிஎஸ்

இது  தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி சண்முகசுந்தரம் கருப்பத்தூர் கோபால் வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜா, சரவணன், சுந்தர், ரவி என்கிற பாம் ரவி ஆகியோருக்கு ஆயுல் தண்டனை மற்றும் 10 ஆயிரம் அபராதமும் கட்ட தவறினால் ஓராண்டு சிறை தண்டனையும், சுரேஷ், நந்தகுமார் ஆகியோருக்கு இரண்டு ஆண்டு சிறதண்டனை, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனையும், மீதமுள்ள நான்கு நபர்களை வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

click me!