பழைய பகை காரணமாக சிறுவர்கள் இருவர் பள்ளி ஆசிரியை துப்பாக்கியால் சுட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா அருகே சாகிபூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் 26 வயதான ஆசிரியை ஒருவரை சிறுவர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இந்த சம்பவம் காலை 9 மணியளவில் நடைபெற்றதாகவும், ஆசிரியையுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த சிறுவர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்கள் துப்பாக்கியால் சுட்ட தோட்டா ஆசிரியையிம் காதருகே துளைத்து சென்றதாகவும், இந்த சம்பவத்தில் ஆசிரியை நூலிழையில் உயிர்தப்பியதகாவும் போலீசார் தெரிவித்துள்ளார். இதில், காயமடைந்த ஆசிரியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், “சூரஜ்பூர் பகுதியில் உள்ள சந்த் வாலி மஸ்ஜித் பகுதியில் வசிக்கும் ரகிப் ஹுசைன், இன்று சுஷில் மாடர்ன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது, சுமார் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள், அவரிடம் பேச வந்துள்ளனர். பின்னர் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.” என தெரிவித்துள்ளனர்.
ஓரின சேர்க்கைக்கு மறுப்பு.. சிறுவனை தண்ணீரில் வைத்து துடிதுடிக்க காமக்கொடூரன் என்ன செய்தார் தெரியுமா
“துப்பாக்கி தோட்டா ஆசிரியையின் வலது காது அருகே தாக்கியது, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆபத்தான நிலையை அவர் கடந்து விட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது.” எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிறுவர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். சிறுவர்களுக்கும் ஆசிரியைக்கும் இடையேயான பழைய பகை உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.