புல் மப்பில் காவலர் குடியிருப்பில் போலீஸ் மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

By vinoth kumar  |  First Published Feb 15, 2024, 3:52 PM IST

பெரம்பலூர் மாவட்டம் திருவளக்குறிச்சியை சேர்ந்த பிரபாகரன்(31). கடந்த 2017-ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். தற்போது பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.


பெரம்பலூர் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் காவலரின் மனைவியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்த மற்றொரு காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பெரம்பலூர் மாவட்டம் திருவளக்குறிச்சியை சேர்ந்த பிரபாகரன்(31). கடந்த 2017-ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார். தற்போது பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தண்ணீர் பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் தங்கி, தினமும் வேலைக்கு சென்று வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: மதுரையில் பயங்கரம்.. பாஜக மாவட்ட பொறுப்பாளர் ஓட ஓட விரட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு!

இந்நிலையில் பிரபாகரன் கடந்த 12-ம் தேதி பணி முடிந்து இரவு மது போதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மற்றொரு முதல்நிலை காவலர் ஒருவரின் மனைவி செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது அவரை பிரபாகரன் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். ஆனால், அலறி கூச்சலிட்ட படியே அவரை கீழே தள்ளிவிட்டு தனது வீட்டிற்கு ஓடிச்சென்றுள்ளார். 

இதையும் படிங்க:  சமாதானம் பேசுவதாக அழைத்து சென்று ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை.. தஞ்சையில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.!

இதையடுத்து  நடந்த சம்பவத்தை தனது கணவரிடம் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதையடுத்து பிரபாகரனை ஆயுதப்படையில் குடியிருக்கும் சக போலீசார் தர்ம அடி கொடுத்துள்ளார்கள். பின்னர் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு  வருகிற 27-ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். 

click me!