விஜிபி குழும உரிமையாளர்கள் மீது நிலமோசடிப் புகார்... கர்நாடக காவல்துறை வழக்குப் பதிந்ததால் அதிர்ச்சி..!.

By Thiraviaraj RMFirst Published Nov 15, 2019, 1:30 PM IST
Highlights

தமிழகத்தின் முன்னணி தொழில் குடும்பங்களில் ஒன்றான விஜிபி குடும்பத்தினர் நிலமோசடிப் புகாரில் சிக்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

விஜிபி குழுமத்தின் பங்குதாரர்களில் ஒருவரான விஜி பன்னீர்தாஸின் மகன்களான ரவிதாஸ், ராஜாதாஸ், பாபுதாஸ் ஆகிய மூவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஜிபி சகோதரர்கள் சென்னையில் ஒற்றுமையாக கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் சொத்துப் பிரச்னை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்தில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. விஜிபி சகோதரர்களில் விஜி செல்வராஜின் மகன் வினோத் ராஜுக்கு சொந்தமான நிலத்தை விஜி பன்னீர்தாஸின் மகன்கள் அபகரிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

குடும்ப சொத்தை பாகப் பிரிவினை செய்ததில் கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு தாலுகாவைச் சேர்ந்த பிஎம் கவால் கிராமத்தில் உள்ள சுமார் 7 ஏக்கர் நிலம் விஜிஎஸ் விநோத்திற்கு பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காலாவதியான பவர் பத்திரத்தை பயன்படுத்தி, அதன் மூலம் சுமார் 1 ஏக்கர் நிலத்தை விஜி பன்னீர்தாஸின் மகன்கள் விற்பனை செய்துவிட்டதாகவும், எஞ்சியுள்ள நிலத்தை தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டதாகவும் வினோத் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் அடிப்படையில் விஜி பன்னீர்தாஸின் மகன்கள் ரவிதாஸ், ராஜாதாஸ், பாபுதாஸ் ஆகிய மூவர் மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் முக்கிய தொழில் குடும்பத்தினர் மீது கர்நாடக போலீசார் மேற்கொண்டிருக்கும் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

click me!