Drug Addiction: அரசு மருத்துவமனையில் வெறியாட்டம் ஆடிய வடிவேலு; போதை ஆசாமியால் தெறித்து ஓடிய செவிலியர்கள்

By Velmurugan s  |  First Published Apr 30, 2024, 12:06 PM IST

மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நள்ளிரவில் வடிவேல் என்பவர் மது போதையில் ரகளை செய்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனைக்கு மன்னார்குடியை ஒட்டி உள்ள சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமன்றி முத்துப்பேட்டை, கோட்டூர், நீடாமங்கலம் முதலான பகுதிகளில் இருந்தும் தினசரி 700க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இருப்பினும் இந்த மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள். செவிலியர்கள் இல்லாத காரணத்தால் நோயாளிகள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

undefined

குறிப்பாக நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க கூடிய சிறப்பு மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இதே மருத்துவமனையில் முச்சுதிணறல் காரணமாக சிகிச்சைக்காக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கு தூய்மை பணியாளர் ட்ரிப்ஸ் (சிலைன்) ஏற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீச்சல் பயிற்சியின்போது விபரீதம் தாய், 2 குழந்தைகள் பலி; நொடிப்பொழுதில் சிதைந்த குடும்பம்

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மன்னார்குடி விழல்காரதெரு பகுதியைச் சேர்ந்தவர் வடிவேலு. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே வடிவேலு மது போதையில் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பகுதிக்கு சென்று அங்கு இருந்த மேஜை, நாற்காலிகளை உடைத்து பெரும் ரகளையில் ஈடுபட்டார். அப்போது மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த பெண் மருத்துவர் மற்றும் செவிலியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் வெளியே ஓடிவிட்டனர்.  

கண்ணிமைக்கும் நேரத்தில் லாரி மீது கார் மோதி விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி பலி

மருத்துவமனையில் நள்ளிரவு மது போதையில் ரகளையில் ஈடுபட்ட வடிவேலை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நள்ளிரவில் மது போதையில் ஈடுபட்டு ரகளை செய்த சம்பவம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

click me!