108 முறை என்னுடன் உடலுறவு கொண்டால் பேய் ஓடிவிடும்.. ஆசிரமத்தில் பெண்ணை அலறவிட்ட போலி சாமியார் !

By Raghupati RFirst Published Aug 2, 2022, 8:57 PM IST
Highlights

ராஜஸ்தான் மாநிலம் ஜலோரில் உள்ள பகவான் தத்தாத்ரேயா ஆசிரமத்தில் உள்ள சாமியார் ஒருவர் பக்தரை பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜலோர் மாவட்டத்தின் சாஞ்சோர் பகுதியில் உள்ள அர்வா ஜனிபுரா கிராமத்தில் அமைந்துள்ள ஆசிரமம் ஒன்று அமைந்துள்ளது. அங்குள்ள சாமியார் ஒருவர் 'கால் சர்ப் தோஷில்' இருந்து விடுபட, அதாவது பேய் பிடித்தலில் இருந்து விடுபட ஒரு பரிகாரத்தை கூறியிருக்கிறார். அதுஎன்னவென்றால், சாமியார் தகரம் உடன் உடலுறவு வைத்திருக்க வேண்டும் என்பதுதான் அது. 

108 நாட்கள் உடல் உறவில் இருக்க வேண்டும் என்றும், அப்போது தான் இதனை நீக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தனது கணவர் மற்றும் மாமியார் ஆசிரம சாமியார் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததாகவும், ஆசிரமத்தின் சேவையில் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆசிரமத்தில் உள்ள ஹேம்லதா மற்றும் தகரம் ஆகியோரை அறிமுகம் செய்வதற்காக அவளை முதலில் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றதே அவளது கணவர்தான்.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 3 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

 'கால் சர்ப் தோஷ்' காரணமாக வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்க நேரிடும் என்று ஹேம்லதா தன்னிடம் கூறியதாக பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் கூறியுள்ளார் பிப்ரவரி 19 அன்று தகராமும், ஹேம்லதாவும் தன்னை ஆசிரமத்திற்கு அழைத்ததாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். ஹேம்லதா தன்னை அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ள அறைக்கு இரவு 8 மணியளவில் அழைத்துச் சென்றார்.

அங்கு தகராம் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றபோது, ஹேம்லதா தனது வாயில் துணியை வைத்து பலாத்கார வீடியோ எடுக்கத் தொடங்கினார் என்றும், இதனை யாரிடமாவது சொன்னால் வீடியோவை வெளியிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதேபோல பலமுறை மிரட்டப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். பிறகு போலீசிடம் புகார் அளித்துள்ளார் அந்த பெண். 

மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டில் 'திடீர்' திருப்பம் !

ஆதாரங்களின் அடிப்படையில் தற்போது ஆசிரமத்தில் பெரும் சோதனை நடத்த போலீசார் தயாராகி வருகின்றனர். தத்தாத்ரேயா ஆசிரமம் நீண்ட காலமாக இயங்கி வருவதாக உள்ளூர் கிராமவாசிகள் கூறுகின்றனர். தற்போது ஹேம்லதா ஆசிரமத்தை நடத்தி வருகிறார். அருகே உள்ள பாலி, ஜலோர், சிரோஹி மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஆசிரமத்திற்கு வருகிறார்கள். 

அதுமட்டுமின்றி இதற்கு முற்றிலும் முரண்பாடாக, ஜாலோர், பாலி மற்றும் பார்மர் உள்ளிட்ட இந்த பெல்ட்டில் அபின் போதை அதிகமாக உள்ளது. மேலும் ஆசிரமத்தில் அபின் சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. உள்ளூர் தகவல்களின்படி, ஹேம்லதா அடிக்கடி சுற்றியுள்ள மாவட்டங்களில் நடக்கும் மத நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..“இது கேவலமா இல்ல ஜெயக்குமார்.. சிங்கம் சிங்கிளா தான் வரும்” இபிஎஸ் தரப்பை கதறவிட்ட ஓபிஎஸ் தரப்பு

click me!