கடையில் ரகசிய கேமரா..கடையில் வேலை பார்க்கும் 6 பெண்களுக்கு பாலியல் தொல்லை.. சுளுக்கெடுத்த உறவினர்கள் !

Published : May 01, 2022, 03:29 PM IST
கடையில் ரகசிய கேமரா..கடையில் வேலை பார்க்கும் 6 பெண்களுக்கு பாலியல் தொல்லை.. சுளுக்கெடுத்த உறவினர்கள் !

சுருக்கம்

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வீரபாண்டியார் நகரில் ஜெயின் ஹித்தீஸ் என்பவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இங்கு 6 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். 

இந்தநிலையில் அந்த கடையில் விற்பனையாளராக பணியாற்றிய கோமதி என்பவருக்கு கடையின் உரிமையாளர் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்துள்ளது.கடையில் உள்ள ஓய்வு அறையில் கேமரா பொருத்தி வேலை செய்யும் பெண்களை ரசித்து வந்திருக்கிறார். இதுகுறித்து குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இதையடுத்து அப்பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்கள் சிலர் கடைக்குள் புகுந்து கடையின் உரிமையாளரை சரமாரியாக தாக்கினர். 

அப்போது கடையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு பெண்ணுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பள்ளப்பட்டி காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெயின் ஹித்திசை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

கடையில் மேலாளராக பணியாற்றி வரும் பெண்ணிற்கும் அதே கடையில் பணியாற்றி வந்த கோமதிக்கும் இடையே ஏற்கனவே கருத்துவேறுபாடுகள் இருந்ததாகவும் இதில் கடை உரிமையாளர் ஜெயின் ஹித்திஸ் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : நாள் குறித்த அறிவாலயம்.. அமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. பரபரக்கும் கோட்டை வட்டாரங்கள் !

இதையும் படிங்க : Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!