
இணைய தளத்தில் ஆபாச படத்தை வெளியிடுவேன்' என்று சிறுமியை மிரட்டி பல முறை பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மிரட்டல்
சென்னை அடையாறு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சமூகவலைதளம் மூலம் ராஜா அண்ணாமலைபுரம் கே.வி.பி.கார்டனை சேர்ந்த ஆகாஷ்(23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சிறுமியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட ஆகாஷ், உனது ஆபாச படங்கள், வீடியோக்கள் நிறைய என்னிடம் உள்ளது. எனவே, நான் கூப்பிடுகின்ற இடத்துக்கு வரவேண்டும். இல்லாவிட்டால் ஆபாச படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து அசிங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார். இதனால் பயந்துபோன சிறுதி ஆகாஷ் அழைப்பின் பேரில் சென்னையில் உள்ள ஒரு விடுதிக்கு சென்றுள்ளார்.
பாலியல் உறவு
அங்குவைத்து சிறுமியிடம் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதுபோல் பலமுறை மிரட்டி விடுதிக்கு வரவழைத்து சிறுமியுடன் ஜாலியாக இருந்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் இதுபற்றி பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது, சிறுமி சொன்ன தகவலை வைத்து பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
போக்சோவில் கைது
உடனடியாக அவர்கள் இதுகுறித்து அடையாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆகாசை செய்து காவல் நிலையம் அழைத்துவந்து விசாரணை நடத்தினர். இதில், சிறுமியை மிரட்டி ஆகாஷ் பலமுறை பாலியல் உறவு கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆகாஷை கைது செய்தனர். அவரிடம் இருந்து மொபைல் போனை பறிமுதல் செய்தனர். இதன் பின்னர் ஆகாசை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.