தூக்கு போடுவது போல் விளையாடிய அண்ணன் - தம்பி.. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

Published : Sep 26, 2022, 06:51 PM IST
தூக்கு போடுவது போல் விளையாடிய அண்ணன் - தம்பி.. கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

சுருக்கம்

தூக்கு போடுவது போல் விளையாடிய சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, மாதவரம் அடுத்துள்ள புழல் புத்தகரம் காமராஜர் நகரில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது மனைவி அமுதா. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய இளைய மகன் கார்த்திக் (11). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

இதையும் படிங்க..‘சட்ட ஒழுங்கு சீர்கேடு : முதல்வர் தான் காரணம்.. அவங்க கூட ஸ்டாலின் கூட்டு’ - கடுப்பான அர்ஜுன் சம்பத்.!

நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் சீனிவாசனின் இளைய மகன் கார்த்திக் மற்றும் அவரது அண்ணன் இருவரும் தூக்கு போடுவது எப்படி என்பதை நடிப்பதற்காக படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு நடித்து காட்டியுள்ளார்கள். பிறகு எதிர்பாராத விதமாக நடிப்பு நிஜமாகி கார்த்திக் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க..வீட்டு காவலில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்.. ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - உண்மையில் சீனாவில் என்ன நடக்கிறது ?

வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த அண்ணன்  தன் வீட்டின் அருகே வேலை செய்திருந்தவரை அழைத்து நடந்ததை கூறியுள்ளார். பிறகு இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன் படி அங்கு வந்த போலீசார்  சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி கவிழ்கிறது ? உள்ளடியில் பாஜக - அடுத்த முதல்வர் யார் ?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை