சென்னையில் ஆஞ்சநேயர் கோவிலில் ஆபாச படம் பார்த்து ஆபாச செயலில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் ஆஞ்சநேயர் கோவிலில் ஆபாச படம் பார்த்து ஆபாச செயலில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. கடந்த 19ம் தேதியன்று போதையில் இருந்த வாலிபர் ஒருவர் கோவிலுக்குள் நுழைந்து பிரகாரத்தில் அமர்ந்து செல்போனில் ஆபாச படம் பார்த்துள்ளார். மேலும், கோவிலில் அருவறுக்கத்தக்க செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இளைஞரின் இந்த அநாகரீகமான செயல்கள் கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி உடனே வெளியே ஓடி வந்து பார்ப்பதற்குள் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றார்.
இதையும் படிங்க;- புதிய கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தட்டிக்கேட்ட முதல் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய கொடூர பெண்.. விசாரணையில் பகீர்
இதையடுத்து, அந்த பகுதி இந்து முன்னணி சார்பில் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் ஜாம் பஜார் போலீசார் அந்த இளைஞர் மீது மத உணர்வை புண்படுத்துதல், ஆபாச செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், ஆபாச செயலில் ஈடுப்பட்ட புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
போலீசார் விசாரணையில் இவர் திருவல்லிகேணி பகுதியில் மேன்சனில் தங்கி உணவு டெலிவரி ஊழியராக ஸ்விக்கியில் பணியாற்றி வந்ததும், இவரது நடவடிக்கை பிடிக்காமல் மனைவி பிரிந்து சென்றதால் மதுவுக்கு அடிமையாகி இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். அத்துடன், போதையில் நிதானம் இழந்து விட்டேன் என கண்ணீர் விட்டு அழுதுள்ளார். கைதான நபரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- இரும்பு கம்பியால் ஒரே போடுபோட்ட காதலன்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்த காதலி.. என்ன காரணம் தெரியுமா?