டேட்டிங் பண்ண அழைத்த பெண்.. காட்டுக்குள் சென்ற இளைஞன் - கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

Published : Aug 06, 2022, 06:22 PM IST
டேட்டிங் பண்ண அழைத்த பெண்.. காட்டுக்குள் சென்ற இளைஞன் - கடைசியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

சுருக்கம்

அறிமுகம் இல்லாத பெண் பேசியதை நம்பி சென்ற வாலிபருக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டம், காந்திபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். இவருடைய மகன் பிரவீன். இவர் தனியார் போக்குவரத்து நிறுவன ஏஜெண்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய செல்போனுக்கு கடந்த கடந்த மாதம் 26-ந் தேதி இரவு 10 மணியளவில் குறுஞ்செய்தி வந்தது. உடனே அவர் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.அப்போது எதிர்முனையில் அவருக்கு அறிமுகம் இல்லாத இளம்பெண் பேசினார். 

மேலும் செய்திகளுக்கு..அடிப்படை வசதி கூட இல்லை..படிப்பை கைவிடாத மாணவி - டீக்கடைக்காரர் மகள் டிஎஸ்பி ஆன கதை !

அந்தப் பெண், நாகம்மநாயக்கன்பாளையம் வந்தால் தன்னை நேரில் சந்தித்து பேசலாம் என்று கூறி அழைத்ததாகத் தெரிகிறது. இதை நம்பி அதிகாலை 1. 30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றார் பிரவீன். அங்கிருந்த இளம்பெண் அவரை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்த 3 பேர் திடீரென்று பிரவீனை மிரட்டி செல்போன் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு அனுப்பி விட்டனர்.

மேலும் செய்திகளுக்கு..“ஆப்ரேஷன் தாமரை 2.0 - தமிழகம் வருகிறார் அமித்ஷா.." அலெர்ட் ஆன திமுக !

புகாரின் பேரில் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன், சப் - இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர் இதில், பிரவீனிடம் செல்போன் பறித்தது திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை ராஜேஷ்குமார் அவருடைய மனைவி ரிதன்யா மற்றும் சின்னக்கரையை சேர்ந்த இளந்தமிழன் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி