தனிமையில் உள்ள பெண்களுக்கு குறி .. ஓட்டலுக்கு அழைத்துச் சென்று உல்லாசம், நகைகளுடன் எஸ்கேப்.

By Ezhilarasan BabuFirst Published Aug 6, 2022, 5:14 PM IST
Highlights

தனிமையில் உள்ள பெண்களை குறி வைத்து, தான் தங்க நகை வியாபாரி என கூறி காதல் வலையில் வீழ்த்திய இளைஞர் ஒருவர் அவர்களை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்து பின்னர் நகையுடன் மாயமாகி வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தனிமையில் உள்ள பெண்களை குறி வைத்து, தான் தங்க நகை வியாபாரி என கூறி காதல் வலையில் வீழ்த்திய இளைஞர் ஒருவர் அவர்களை ஹோட்டல் அறைக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்து பின்னர் நகையுடன் மாயமாகி வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

பெண்கள் பல்வேறு வகைகள் ஏமாற்றப்படுகின்றனர், அதிலும் குறிப்பாக கணவனை இழந்து தனிமையில் இருக்கும் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பலராலும் திட்டமிட்டு குறி வைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அதில் அதிர்ச்சி என்னவென்றால் சிலர் இதை ஒரு தொழிலாகவே செய்து வருகின்றனர் என்பதுதான். இந்த வகையில் திருமணமாகாத பெண்களை குறிவைத்து அவர்களின்  ஆபரணங்களை இளைஞர் ஒருவர் அபகரித்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நெல்லூர் மாவட்டம் கோட்டா மண்டலத்தைச் சேர்ந்த வெண்டி சந்திரா என்ற செவூரி சந்திரா, இவர் பெற்றோர்களை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக கூடூர் மற்றும் திருப்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தார். திருப்பதியில் பணிபுரியும்போது பேருந்து  நிலையத்தை ஒட்டிய பகுதிகளில் தனியாக வசிக்கும் பெண்களை குறிவைத்து அவர்களை காதல் வலையில் வீழ்த்தி உல்லாசம் அனுபவிப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார், ஒருகட்டத்தில் இதை வைத்தே பெண்களை ஏமாற்ற முடிவுசெய்தார்.

இதையும் படியுங்கள்: டியூஷன் வந்த மாணவியை படுக்கை அறைக்கு கூட்டி சென்று, மது குடிக்க வைத்து வாத்தியார் செய்த காரியம்..

தான் பெரிய பணக்காரர் என்றும், தங்கம் வியாபாரம் செய்வதாகவும் கூறி  பல பெண்களுடன் பழகி வந்தார், பின்னர் பெண்களை அதே பகுதியில் உள்ள ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தூக்க மாத்திரை கொடுத்து, அவர்களுடன் உல்லாசம் அனுபவிப்பது உடன் அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை அபகரித்துக் கொண்டு தலைமறைவாகி வந்துள்ளார். இதையே வாடிக்கையாக வைத்திருந்தார். இவரால் ஏமாற்றப்படும் பெண்கள் சிலர் வெளியில் சொன்னால் அவமானம் எனக் கருதி இதுகுறித்து புகார் ஏதும் கூறாமல் இருந்து வந்துள்ளனர்.

ஆனால் இவரால்  மோசடி செய்யப்பட்ட பெண்கள் பலர், திருப்பதி, நெல்லூர், விஜயவாடா குண்டூர், ஏலூர் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளனர். இவர் மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக கைதாகி பல முறை சிறையும் சென்றுள்ளார். ஆனாலும் சந்திரா கொஞ்சமும் திருந்தவில்லை, கடந்த ஜனவரி மாதம் சிறையில் இருந்து வெளியில் வந்த இவர், விஜயவாடாவில் உள்ள பவானி புரத்தைச் சேர்ந்த பெண்ணை குறிவைத்து அந்தப் பெண்ணிடமிருந்து 36 கிராம் தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

இதையும் படியுங்கள்: வான்டடா வீடியோகால் செய்து ஆடைகளை அவிழ்த்து நின்ற பெண்.. 2 செகண்ட் பார்த்த பாவத்துக்கு 7 லட்சம் அழுத தொழிலதிபர்

இதேபோல் ஜூலை மாதம் கிருஷ்ணா லங்காவில் வசிக்கும் மற்றொரு பெண்ணை ஏமாற்றி 61.5 கிராம் தங்க நகைகளை பறித்துக் கொண்டு தலைமறைவானார். இதனை அடுத்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர், அதில் கிருஷ்ணா நகர் அருகில் உள்ள பண்டித தெரு பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 97.5 கிராம் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 
 

click me!