கணவன் இறந்த கையோடு அடுத்தவர் கணவனை வலைத்து போட்ட ஹிந்தி டீச்சர்.. தனிமையில் இருந்தபோது பயங்கரம்.

Published : Aug 06, 2022, 04:29 PM ISTUpdated : Aug 06, 2022, 04:33 PM IST
கணவன் இறந்த கையோடு அடுத்தவர் கணவனை வலைத்து போட்ட ஹிந்தி டீச்சர்.. தனிமையில் இருந்தபோது பயங்கரம்.

சுருக்கம்

கணவர் இறந்த கையோடு பள்ளிக் கூடத்திற்கு அருகில் வாடகை வீட்டில் வசித்து வந்த ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கணவர் இறந்த கையோடு பள்ளிக் கூடத்திற்கு அருகில் வாடகை வீட்டில் வசித்து வந்த ஆசிரியர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தனிமையில் இருந்த ஆசிரியை வேறு ஒரு பெண்ணின் கணவருடன் உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்துள்ளது. 

பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக் காதலை மையமாக வைத்து அரங்கேறி வருகிறது. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படும் போது அதில் கணவனோ, மனைவினோ சில நேரங்களில் வழி தவறி திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபடும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. ஒருகட்டத்தில் அதிலிருந்து வெளிவர முடியாமல் சிக்கிக் கொள்ளும் அவர்கள்  உயிரை இழக்கும் அவலத்திற்கு தள்ளப்படுகின்றனர். இது போன்ற ஒரு சம்பவம் கர்நாடக மாநிலம் மைசூரில் நடந்துள்ளது.

இதையும் படியுங்கள்:  டியூஷன் வந்த மாணவியை படுக்கை அறைக்கு கூட்டி சென்று, மது குடிக்க வைத்து வாத்தியார் செய்த காரியம்..

முழு விவரம் பின்வருமாறு:- கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் நஞ்சன்கூடு நகரில் மொரார்ஜி தேசாய் உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. அதில் இந்தி  ஆசிரியையாக பணியாற்றி  வந்தவர் சுலோச்சனா, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியை சுலோச்சனாவின் கணவர் இறந்துவிட்டார், இந்நிலையில் சுலோச்சனா தனிமையில் இருந்து வந்தார், பள்ளிக்கூடத்திற்கு அருகிலேயே வீடு வாடகை எடுத்து தங்கி வந்தார். இந்நிலையல் இப்பகுதியை சேர்ந்த காயத்ரி என்பவரின் கணவர் முருகேஷ் என்பவருடன் ஆசிரியை சுலோச்சனாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்:  வான்டடா வீடியோகால் செய்து ஆடைகளை அவிழ்த்து நின்ற பெண்.. 2 செகண்ட் பார்த்த பாவத்துக்கு 7 லட்சம் அழுத தொழிலதிபர்

முருகேஷ் மைசூரு கண்டேஸ்வரர் கோவிலில் அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஆசிரியை சுலோக்சனாவும் முருகேசனும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் ஒரு கட்டத்தில் மனைவி காயத்ரிக்கு தெரியவந்தது, அப்போது ஆசிரியை நேரில் சந்தித்த காயத்திரி இனிமேல்  தனது கணவருடன் பழக வேண்டாம் என்றும், மீறி பழகினால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். ஆனால் ஆசிரியை சுலோச்சனா அதை பொருட்படுத்தவில்லை, இந்நிலையில் சுலச்சனாவை காயத்ரி தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

ஆசிரியை சுலோச்சனா நஞ்சனகூடுவில் வாடகை வீட்டில் வசித்து வந்த நிலையில், அவரின் வீட்டிற்கு மூன்று பேருடன் வந்த காயத்ரி தனிமையில் இருந்த ஆசிரியையை கழுத்தை நெரித்து கொலை செய்தார். இந்த  கொலை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு  அரங்கேறியது, இந்த கொலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அதில் தொடர்புடைய நஞ்சனகூடு நகர்மன்ற உறுப்பினர் மற்றும் முக்கிய குற்றவாளி காயத்ரி உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?
காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!