விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக மகேஸ்வரன்(40) என்பவர் பணியாற்றி வருகிறார்.
விழுப்புரம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்போனில் ஆபாச படம் காட்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன்(40) போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக மகேஸ்வரன்(40) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க;- நடு இரவில் திடீரென மாயமான மனைவி! ஆண் நண்பர்களுடன் மதுவிருந்து, உல்லாசம்! நேரில் பார்த்த ஃபாரின் ரிட்டன் கணவன்!
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் பகுதியில் அரசு பள்ளி சார்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதற்கு திருவக்கரை பள்ளியிலிருந்து 9ம் வகுப்பு மாணவிகளை இருவரை தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் விழுப்புரம் அழைத்து சென்றார். அங்கு மகேஸ்வரனுக்கு சொந்தமான வீட்டில் பள்ளி மாணவிகளை அழைத்துச் சென்று செல்போனில் ஆபாச படம் காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க;- கள்ளக்காதலை கண்டித்த மனைவி.. பக்கவாக ஸ்கெட்ச் போட்டு கொலை.. கணவர் சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன்(40) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மகேஸ்வரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.