கணவனை ஜாமீனில் எடுக்க எதிர்ப்பு; மாமியாரை வெட்டி கொன்ற மருமகள் தஞ்சையில் கைது

By Velmurugan s  |  First Published Dec 13, 2023, 5:36 PM IST

தஞ்சையில் கணவன், மனைவி விவகாரத்தில் மாமியரை வெட்டி கொலை செய்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கழுகபுளிக்காட்டை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவி பர்வீன்பானுவுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் பர்வீன்பானுவை, ஜேம்ஸ் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் மனைவி பர்வீன் பானு புகார் அளித்துள்ளார். 

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் ஜேம்ஸை கைது செய்துள்ளனர். இந்நிலையில் சிறையில் உள்ள தனது மகனை ஜாமீன் எடுக்க அவரது தாய் ஆரோக்கிய மேரி முயற்சி செய்து உள்ளார். இது பர்வீன்பானுக்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மருமகளுக்கும், மாமியாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

கோவையில் பொறியியல் மாணவரை நிர்வாணப்படுத்தி ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய கொடூரம்; போலீஸ் வலை

இதில் ஆத்திரமடைந்த மருமகள் ஆரோக்கிய மேரியை அரிவாளால் வெட்டியதால் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஆரோக்கிய மேரி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆரோக்ய மேரியின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து பர்வீன்பானுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப சண்டை காரணமாக மாமியாரை மருமகள் அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பட்டுக்கோட்டை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!